• Jul 24 2025

மைனா நந்தினிக்கு கூட இல்லை ஷிவினுக்காக யோகேஷ் கொண்டு வந்த சூப்பர் கிப்ட்- அசந்து போய் நின்ற ஹவுஸ்மேட்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ். தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் அசிம், விக்ரமன், மைனா, அமுதவாணன் உள்ளிட்ட 9 போட்டியாளர்கள் உள்ளே இருக்கின்றனர்.இனி வரும் நாட்கள் மிக முக்கியமானவை என்பதால், அனைத்து போட்டியாளர்களும் இறுதி சுற்று வரை முன்னேற டாஸ்க்கில் சிறந்து விளங்க வேண்டும் என்ற கட்டாயத்திலும் உள்ளனர்.

இதனால், வரும் நாட்கள் விறுவிறுப்பு நிறைந்தவையாக இருக்கும் என்றும் பிக்பாஸ் பார்வையாளர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.அந்த வகையில் இந்த வாரம் Freeze Task கொடுக்கப்பட்டுள்ளது. போட்டியாளர்களின் குடும்பத்தினர் அனைவரும் பிக்பாஸ் வீட்டில் வருகை தருகின்றனர்.


மைனா நந்தினி, ஷிவின் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் தங்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வருகையால் கண் கலங்கவும் செய்கின்றனர்.அந்த வகையில் முதலில் தனது குழந்தை மற்றும் கணவர் யோகேஷ் ஆகியோர், உள்ளே நுழைந்ததும் மைனா சற்று எமோஷனல் ஆகவும் மாறி இருந்தார். 

மேலும் யோகேஷ், ஷிவினிடம் பேசுகையில், "ஷிவின்கிட்ட நான் ஒரு விஷயம் சொல்லணும். வெளியே வந்தாலும் ஒரு ஃப்ரண்டா நான் இருப்பேன்" என கூறியபடி ஷிவினின் கையை குலுக்க போகிறார். அப்போது மைனா இதனை ஜாலியாக தடுக்க, பின்னர் அவரை கட்டியணைத்து வாழ்த்தவும் செய்கிறார் யோகேஷ். அவரது வார்த்தைக்கு ஷிவினும் நன்றியை வெளிப்படுத்தி இருந்தார்.


அதே போல, "ஷிவினுக்காக நான் ஒரு விஷயம் எடுத்துட்டு வந்திருக்கேன்" எனக்கூறும் யோகேஷ், தனது பாக்கெட்டில் இருந்து ரோஜா பூவை எடுத்து நீட்டுகிறார். இதனை ஷிவினும் ஏற்றுக் கொள்ள, அவர்கள் அருகே இருக்கும் மைனா நந்தினி வாயடைத்த படி நிற்கிறார். மற்ற போட்டியாளர்கள் அனைவரும் இந்த நிகழ்வை வைத்து மைனா நந்தினியை ஜாலியாக கலாய்த்துக் கொண்டும் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement