• Jul 26 2025

பசங்களா படிப்பு தான் முக்கியம் கைவிட்டிடாதீங்க- திடீரென விசித்திராவுக்கு சர்ப்போட் பண்ணிய கூல் சுரேஷ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.இந்த நிகழ்ச்சியில் முதல் ஆளாக அனன்யா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகின்றது. அத்தோடு அடுத்த வாரத்தின் தலைவராக சரவண விக்ரமும் தேர்வாகியுள்ளார். இதனால் முதல் வாரத்தைப் போல இரண்டாம் வாரத்திலும் என்ன சுவாரஸியம் நடக்கப்போகின்றது என்பதற்காக ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாகவே சர்ச்சையில் சிக்கிவருபவராக நடிகை விசித்திரா இருந்து வருகின்றார்.முதலில் சக போட்டியாளரின் ஆடை குறித்து பேசியது; பிறகு அனன்யாவின் உடம்பில் இருக்கும் டாட்டூவை காட்ட சொன்னது என அவரது ஒவ்வொரு செயல்பாடும் ஹவுஸ் மேட்ஸ்களால் தொடர்ந்து விமர்சிக்கப்படுகின்றது. 


 இப்படி இருக்க நேற்று ஹவுஸ் மேட்ஸுடன் கமல் ஹாசன் பேசினார். அப்போது அவர் படிப்பு தொடர்பான விஷயத்தை பேசும்போது படித்தால்தான் சாதிக்க முடியும் என்பதில்லை என்ற தொனியில் பேசினார். அதேசமயம் படித்தால்தான் குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்ற நிலைமையில் இருப்பவர்கள் படித்துதான் ஆக வேண்டும் எனவும் கூறியிருந்தார். 

கமலின் இந்தப் பேச்சு ஒருதரப்பினரை திருப்திப்படுத்தவில்லை. மேலும் கல்வி குறித்து கமல் ஹாசன் இப்படி பேசியிருக்கக்கூடாது எனவும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றனர்.இந்நிலையில் கூல் சுரேஷ் பிக்பாஸ் வீட்டில் இருந்தபடி தனது குழந்தைகளுக்கு வேண்டுகோள் வைத்தார். வீட்டில் இருக்கும் கேமராவை பார்த்து அவர் தனது குழந்தைகளின் பெயரை குறிப்பிட்டு, "பசங்களா நல்லா படிங்கடா. விசித்திரா சொல்றதை கேளுங்க. படிப்பு ரொம்ப முக்கியம். 


அவங்களே சொல்றாங்க பாருங்க படிச்சிருந்தா நடிகையாக ஆகியிருக்காமல் ஆஃபிஸராக ஆகியிருப்பேனு சொல்றாங்க. நான் படிக்கல அதான் உங்களுக்கு சொல்லித்தர முடியல. அம்மா படிச்சிருக்காங்க அவங்க சொல்லித்தராங்க. நல்லா படிங்க. டியூஷன்லாம் ஒழுங்கா போங்க. காலேஜ் படிச்சிட்டு என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள்" என்றார். இதனை பார்த்த ரசிகர்கள் விசித்திராவின் கல்வி குறித்த பேச்சுக்கு கூல் சுரேஷ் முதலில் சப்போர்ட் செய்ய ஆர்மபித்திருக்கிறார். எனவே மேலும் பலர் புரிந்துகொள்வார்கள் என்று கூற ஆரம்பித்திருக்கின்றனர்.


Advertisement

Advertisement