• Jul 25 2025

பாக்யாவுக்கு கல்யாணம்.. புலம்பும் கோபிக்கு ராதிகா கொடுக்கும் ஷாக் – பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து நடக்கப்போவது என்ன?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் நேற்றைய எபிசோடில் பாக்கியா பழனிச்சாமிக்கு போன் செய்து வீட்டிற்கு தங்களது உறவின பெண் வந்திருக்கிறார் நீங்க வந்து பெண் பாருங்க என்ன சொல்லிக் கொண்டிருக்க இதை கேட்ட கோபி பாக்கியா அவனை தான் பெண் பார்க்க வர சொல்கிறார் என தவறுதலாக புரிந்து கொண்டார்.

இதைத்தொடர்ந்து வரும் நாட்களில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

அந்த வீடியோவில் பழனிச்சாமி பெண் பார்க்க வந்திருக்க பாக்யா காபி கொடுக்க அவர் நல்லா இருக்கு காபி மட்டும் இல்ல நீங்களும் தான் என்று பேசுவது போல கனவு கண்டு கோபி அதிர்ச்சியாகி எழுந்து கொள்கிறார்.

உடனே ராதிகா ஹலோ உங்களுக்கு என்ன ஆச்சு எனக்கு கேட்க கோபி பாக்யாவுக்கு கல்யாணம் என புலம்ப பாக்யா கல்யாணம் பண்ணிக்கிறாங்கனே வச்சுக்கலாம், அதுல உங்களுக்கு என்ன பிரச்சனை என கேட்டு ராதிகா அதிர்ச்சி கொடுக்கிறார்.



Advertisement

Advertisement