• Jul 25 2025

உயிருக்கு ஆபத்தான நிலையில் பாரதி...எதிர்பாராத இறுதிக்கட்டத்தில் சீரியல் ..வெளியானது ப்ரோமோ

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் ஆனது தற்போது விறுவிறுப்பிற்கும் பரபரப்பிற்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கின்றது.

இந்நிலையில்  கண்ணம்மாவிடம் பாண்டி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாரதி பாண்டியுடன் குஸ்தி சண்டை இடுகிறார்.பாண்டி கடைசி நேரத்தில் குஸ்தியில் தோற்று கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்கிறார்.பாரதியிடம் தோற்று விட்டதால் பாண்டி கடைசியில் பாரதியின் தலையில் கம்பியால் அடித்து விடுகிறார்.

பாரதி அந்த இடத்திலே மயக்கம் போட்டு விழுந்து விட ,பாரதியை ஹாஸ்ப்பிட்டலுக்கு தூக்கி செல்கிறார்கள்.கணபதி, பின்பு சௌந்தர்யாவுக்கு போன் செய்து இங்கே நடந்த விஷயங்களை கூறுகிறார்.சௌந்தர்யா பதறி அடித்து ஓடி வருகிறார் .கண் விழித்த பாரதியை பார்த்து சௌந்தர்யா,பாரதிக்கு என்ன உனக்கு என்னாச்சு என்று கேட்க,நீங்கலாம் யாரு என்று பாராதி கேட்கிறார்.எல்லோரும் அதிர்ச்சியில் நிற்கிறார்கள் .

இவ்வாறாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியது. 


Advertisement

Advertisement