• Jul 23 2025

அட்ராசக்க... 'நா ரெடி தான் வரவா' பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியல் ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் பாரதி கண்ணம்மா. இதன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது பாரதி கண்ணம்மா சீசன்-2 ஒளிபரப்பாகி வருகின்றது.

அதாவது வேறு ஒரு கதையை மையமாகக் கொண்டு நகரும் இந்த சீரியலில் முந்தையை சீசனில் இருக்கும் பெயர்களே இன்றுவரை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த சீசனும் விறுவிறுப்பாக இருந்தாலும், முதல் சீசன் அளவிற்கு இரண்டாவது சீசன் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறவில்லை.


மேலும் பாரதி கண்ணம்மா முதல் சீசனில் ரோஷினி, அருண் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். ஆனால் தற்போது 2-ஆவது சீசனில் அருணிற்குப் பதிலாக சிபு நடித்து வருகின்றார். இந்த சீரியலில் முதல் சீசனில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகை லிஷா ராஜ்குமார் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.


குட்டிச் சிறுமியாக இருந்த இவர் தற்போது நன்றாகவே வளர்ந்துவிட்டார். சீரியலைத் தாண்டி சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் லிஷா தற்போது விஜய்யின் 'நா ரெடி தான் வரவா' பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் "அடடே நீங்களா இது..? இந்தளவிற்கு வளர்ந்து விட்டீர்களே" எனக்கூறித் தமது கமெண்டுகளைப் பதிவிட்டு வருகின்றனர்.  

Advertisement

Advertisement