• Jul 23 2025

அஜித்துடனான காதல் திருமணத்திற்குப் பின்னரும் படம் நடித்த ஷாலினி... அதுவும் எந்தப் படம் தெரியுமா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக திகழ்ந்து வருபவர்கள் அஜித்-ஷாலினி தம்பதியினர். அதாவது ரீல் ஜோடிகளாக இருந்து ரியல் ஜோடியாக மாறிய அஜித் - ஷாலினி இருவரும் 'அமர்க்களம்' திரைப்படத்தில் இருந்து காதலித்து வந்தனர். 


பின்னர் இவர்கள் இருவரும் 2000-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்வில் இணைந்து கொண்டனர். இவர்களுக்கு தற்போது ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். 


இவ்வாறாக அஜித்தை திருமணம் செய்துகொண்ட பின் சினிமாவில் இருந்து விலகிய ஷாலினி, இன்று வரை கம்பேக் கொடுத்து மீண்டும் நடிக்கவே இல்லை. இருந்தாலும் திருமணத்திற்குப் பின்னர் ஷாலினி ஒரு தமிழ்ப்படம் நடித்திருக்கின்றார்.


அதாவது 'பிரியாத வரம் வேண்டும்' என்ற படத்தில் நடிகர் பிரசாந்துக்கு ஜோடியாக திருமணத்திற்குப் நடித்திருந்தார் ஷாலினி. இப்படமானது கல்லூரியை மையப்படுத்தியதாக அமைந்திருக்கின்றது. அதாவது சிறுவயது முதலே நண்பர்களாக இருந்து வந்த இவர்கள் ஒரு கட்டத்தில் காதலர்களாக மாறுவதை மையமாகக் கொண்டே இப்படம் அமைந்திருக்கின்றது.


எது எவ்வாறாயினும் திருமணத்திற்குப் பின்னர் ஷாலினி நடித்த இந்தப்படம் இன்றுவரை ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கின்றது. 

Advertisement

Advertisement