• Jul 25 2025

பரபரப்பான திருப்பங்களுடன் வெளியான பாரதி கண்ணம்மா-மொத்த உண்மையையும் போட்டுடைத்த பாரதி..வெளியான வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாரதிகண்ணம்மா.அனைவரும் விரும்பி பார்க்கப்படும் இந்த சீரியல் எப்போது முடியும் என பல ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

இவ்வாறுஇருக்கையில் பாரதி கண்ணம்மா சீரியல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. படப்பிடிப்பில் இருந்து கூட சில வீடியோக்கள் வெளிவந்து சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவின.

அந்த வகையில் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த மாதிரி பாரதிக்கு DNA பரிசோதனை மூலம் ஹேமா மற்றும் லட்சுமி ஆகிய இருவரும் தனது மகள்கள் தான் என தெரியவந்துள்ளது.

தனது அப்பா யார்..?  எனக் கேட்டு மாடியில் இருந்து குதிக்க  போகின்றார் ஹேமா.உடனே அந்த இடத்திற்கு விரைந்து வரும் பாரதி..நான் தான் ஹேமா உன்னுடைய அப்பா...கண்ணம்மா தான் நான் தாலி கட்டின மனைவி...நீயும் லட்சுமியும் எனது குழந்தைகள்...எனக் கூறுகின்றார்.

அதன் பிறகு தான் DNA டெஸ்ட் எடுத்த விடயத்தைக் கூறுகின்றார்.இவங்க என்னுடைய குழந்தைகள் எனக் கூற கண்ணம்மா முறைத்து பார்க்கின்றார்.இவ்வாறு பரபரப்பு திருப்பங்களுடன் இன்றைய ப்ரமோ வெளியாகி உள்ளது.

இதோ அந்த ப்ரமோ...




Advertisement

Advertisement