• Jul 24 2025

'துணிவு' படத்தில் அஜித் ஹீரோவா? இல்லேன்னால் வில்லனா?.. உண்மையை உடைத்த இயக்குநர்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்தை வைத்து 'நேர்கொண்ட பார்வை, வலிமை' ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத் தற்போது மூன்றாவது முறையாக அவருடன் இணைந்து இயக்கியுள்ள படம் தான் 'துணிவு'. போனிகபூர் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி உள்ள இப்படத்தில் அஜித் உடன் இணைந்து மஞ்சு வாரியர், பாவனி, அமீர், சமுத்திரக்கனி, சிபி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.


அத்தோடு இப்படத்திற்கு மெல்லிசை மன்னன் ஜிப்ரான் இசையமைத்து உள்ளார். வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர உள்ள நிலையில் இப்படம் குறித்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் அடுக்கடுக்காக வெளிவந்த வண்ணம் உள்ளன. 

இந்நிலையில் தற்போது துணிவு படம் குறித்து இயக்குநர் எச்.வினோத் முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். அதாவது "வலிமை படம் ரிலீசாகும் முன்பே துணிவு படம் பண்ணுவது உறுதியாகிவிட்டது. இப்படத்தை நான் சின்ன பட்ஜெட்டில் எடுக்கத்தான் முதலில் திட்டமிட்டு இருந்தேன். 


அஜித் சார் இப்படத்தின் உடைய கதை கேட்டதும் நான் இதில் நடிக்க விரும்புகிறேன் என என்னிடம் சொன்னார். அதன்பின் தான் இது பெரிய பட்ஜெட் படங்களில் ஒன்றாக மாறியது. மேலும் இது முழுக்க முழுக்க பணத்தை பற்றிய படமாக இருக்கும். சுருக்கமா சொல்லனும்னா அயோக்கியர்களின் ஆட்டம் தான் இந்த துணிவு படம் என்கிறார் வினோத்.


மேலும் துணிவு படத்தில் அஜித் வில்லனாக நடித்துள்ளதாக ஏற்கெனவே தகவல் பரவியது குறித்து பதிலளித்துள்ள இயக்குநர் எச்.வினோத் "அஜித் வில்லனா நடிச்சிருக்காருனு நான் சொன்னா உடனே மங்காத்தா மாதிரியானு கேட்பாங்க.

இந்த மாதிரி அவங்க சொந்த கற்பனைய கொட்றது தான் எல்லாத்துக்கும் பிரச்சனையே. ஆனால் நான் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன், ஆடியன்ஸ் விரும்புற எல்லாமே இந்தப் படத்தில அவங்களுக்கு இருக்கும்" எனக் கூறியுள்ளார்.


அதுமட்டுமல்லாது துணிவு படத்தின் கதைப்படி ஹீரோவுக்கு ஜோடி வேண்டாம் என முடிவு செய்துவிட்டோம். மஞ்சு வாரியர் அஜித்துக்கு ஜோடி இல்லை. மஞ்சு வாரியர், அமீர், பாவனி, சிபி இவர்களெல்லாம் அஜித்தின் டீம் அவ்வளவுதான்.

இந்த ஒவ்வொரு கதாபாத்திரமும் ரொம்பவே வித்தியாசமானதாக இருக்கும். அஜித்தின் வயசுக்கு நிகரான ஒரு பெண் கதாபாத்திரம் படத்தில் இருந்தால் நல்லா இருக்கும் என்பதற்காக மட்டுமே மஞ்சு வாரியரை தேர்ந்தெடுத்தோம்" எனவும் தெரிவித்திருக்கின்றார்.

Advertisement

Advertisement