• Jul 26 2025

பாவம் கணேசன் சீரியல் நடிகை லதா ராவுக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கின்றாரா?- நம்பவே முடியலையே

stella / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபல்யமானவர் தான் நடிகை லதா ராவ். இவர் தமிழில் மட்டுமல்லாது மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளிலும் பல சீரியல்களில் நடித்து வருகின்றார்.அதன்படி மெட்டி ஒலி சீரியல் மூலம் தனது சீரியல் பயணத்தை ஆரம்பித்தார்.


தொடர்ந்து பல திரைப்படங்களிலும் வெப் சீரியல்களிலும் நடித்து வருகின்றார்.அந்த வகையில் இந்த ஆண்டு வெளியான சூழல் வெப் தொடரில் நடித்திருந்தார். இவர்  சக நடிகரான ராஜ்கமலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 


லதா ராவ் - ராஜ் கமல் தம்பதியினருக்கு லாரா, ராகா என இரு மகள்கள் உள்ளனர். பொறுப்புள்ள குடும்ப தலைவியாக மாறிவிட்ட லதா ராவ் இப்போதெல்லாம் சீரியல்களில் பெரிதாக நடிப்பதில்லை. இருப்பினும், சிறிய விளம்பர படங்கள், இன்ஸ்டாகிராம் மாடலிங் ஷூட் என ஆக்டிவாக இருந்து வருகிறார். 


 இந்நிலையில் மூத்தமகள் லாராவின் பிறந்தநாளை அண்மையில் கொண்டாடிய லதா ராவ் தனது மகளுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். லதா ராவுக்கு திருமணமானதையே நம்ப முடியாத ரசிகர்கள், அந்த புகைப்படங்களை பார்த்து அவருக்கு இவ்வளவு பெரிய மகளா? என ஆச்சரியத்துடன் கேட்டுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement