• Jul 24 2025

பெரிய மனசு சார் உங்களுக்கு ..குக் வித் கோமாளி KPY பாலா செய்த காரியம் - குவியும் பாராட்டுக்கள்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

சில கலைஞர்களை பார்த்தால் மக்கள் அவர்கள் இந்த தொலைக்காட்சி பிரபலங்கள் என சரியாக கூறி விடுவார்கள்.

அப்படி விஜய் தொலைக்காட்சிக்கு என்று சில முகங்கள் அதாவது கலைஞர்கள் உள்ளார்கள். அதில் ஒருவர் தான் KPY பாலா, எந்த நிகழ்ச்சியை எடுத்துக் கொண்டாலும்  இவர் வந்துவிடுவார்.

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை விட அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி பெரிய அங்கீகாரத்தை கொடுத்துள்ளது என்றே கூறலாம். 

இந்நிலையில் kpy பாலா தந்து சொந்த பணத்தில் ஆம்புலன்ஸ் வண்டியை வாங்கி கொடுத்து உதவியுள்ளார்.

இதனை தனது இன்ஸ்டாவில் ஆம்புலன்ஸ் வழங்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.அதில் '''' என்னுடய 5 வருட கனவு நினைவாயுடுச்சு❤️❤️❤️❤️❤️. எப்புடியாவுது வீட்டுல இருக்குற பெரியவங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி குடுக்கணும்னு நினைச்சன் என் கிட்ட காசு இல்ல. ரொம்ப நாளா காசு சேர்த்து எப்புடியோ என் சொந்த காசுல ஆம்புலன்ஸ் வாங்கி குடுத்திருக்கன் . பெரியவங்க ஆட்டோ ல செக் அப்க்கு ஆஸ்பத்திரி போக வேண்டம் ஆம்புலன்ஸ் லே போலாம் .இது மட்டும் இல்லாம வீட்டுக்கு அருகில்  இருக்குற கிராமத்துல யாருக்கு எமர்ஜென்சி நாளும் இந்த ஆம்புலன்ஸ் இலவசம் .அதுக்கு பெட்ரோல் இலவசமாக குடுத்துர்றன் ❤️❤️❤️❤️❤️ அனைவருக்கும் மிக்க நன்றி என் பிறந்தநாள்க்கு விஷ் பண்ண எல்லாருக்கும் நன்றி உங்க எல்லாருடயா ஆதரவால தான்  என் கனவ சாதிக்க முடிஞ்சிது லவ் யூ லவ் யூ லொட்ஸ் என பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருவதுடன்,இவரின் செயலைக் கண்டு பிரமித்து பாராட்டி வருகின்றனர்.

Advertisement

Advertisement