• Jul 23 2025

'நா ரெடி' பாடலுக்கு... நடிகர் விஜய்யை போல் நடனமாடி அசத்திய பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்..! வைரலாகும் வீடியோ..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய்க்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவருக்கு இந்த அளவுக்கு ரசிகர் பட்டாளம் உருவாவதற்கு அவரின் நடனமும் ஒரு காரணம் என்றே கூறலாம். தமிழ் சினிமாவில் விஜய்யை போல் நடனத்தில் அதகளம் செய்யும் நடிகர்கள் மிகவும் கம்மி தான். இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு நடனமாடி அசத்தி வருகிறார் விஜய்.

அந்த வகையில், தற்போது லியோ படத்திற்காக அவர் பாடியுள்ள நான் ரெடி பாடலுக்கு சுமார் 2 ஆயிரம் நடனக் கலைஞர்களுடன் நடனமாடியும் அசத்தி இருக்கிறார் விஜய். நான் ரெடி பாடல் கடந்த ஜூன் 22-ந் தேதி நடிகர் விஜய்யின் பிறந்தநாளன்று வெளியிடப்பட்டது. 

காலை தூக்கிக் கொண்டு விஜய் ஆடியுள்ள அந்த ஹூக் ஸ்டெப் தான் தற்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை ஆக்கிரமித்து உள்ளன. விஜய் ஆடிய அந்த ஹூக் ஸ்டெப்பை ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்கள் பலரும் நடனமாடி வீடியோ எடுத்து ரீல்ஸ் ஆக பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான வெங்கடேஷ் ஐயர் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டு இன்ஸ்டாவில் டிரெண்டாகி உள்ளார்.

அவர் அச்சு அசல் விஜய்யை போல் நடனமாடுவதை பார்த்து ரசிகர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர்.இந்த வீடியோ தற்போது செம வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement