• Jul 24 2025

பிக் பாஸ் 6 டைட்டில் வின்னர் அசீம் தானாம்- விஜய் டிவி பிரபலம் கொடுத்த அப்டேட்

stella / 2 years ago

Advertisement

Listen News!


பிக் பாஸ் 6 நிகழ்ச்சி முடிய இன்னும் சில நாட்களே இருக்கிறது.இந்த நிலையில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் முகமாக நேற்றைய தினம்  மா.கா.பா. ஆனந்தும், ப்ரியங்கா தேஷ்பாண்டேவும் நேற்று வந்தார்கள்.அப்பொழுது அறம்வெல்லும் என்கிற ஹேஷ்டேக் பற்றி பேசினார் ப்ரியங்கா. 

மா.கா.பா ஆனந்த் சொல்வதை வைத்து பார்த்தால் அறம் விக்ரமன் அல்ல மாறாக அசீம் தான் வின்னர். இதை முன்கூட்டியே உளறிய மா.கா.பா.வுக்கு நன்றி என அசீம் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மா.கா.பா. ஆனந்தின் அந்த வீடியோவை அதிக அளவில் ஷேர் செய்து வருகிறார்கள். 


அசீம் எதற்கெடுத்தாலும் கோபப்பட்டு கத்தலாம். ஆனால் எப்பொழுதுமே முயற்சியை கைவிட்டது இல்லை. இந்த சீசன் கொஞ்சமாவது பார்க்கும்படி இருக்கிறது என்றால் அதற்கு அசீம் தான் காரணம். சீசன் முழுவதும் கன்டன்ட் கொடுத்தவருக்கு டைட்டில் கொடுப்பதில் தவறு எதுவும் இல்லை. என்ன ஒரு சண்டக் கோழிக்கு டைட்டிலா என்று தான் லைட்டா வருத்தமாக இருக்கிறது என்கிறார்கள் பிக் பாஸ் பார்வையாளர்கள்.


எவிக்ஷனுக்கான நாமினேஷன் ப்ராசஸின்போது எல்லாம் அசீம் பெயரை மறக்காமல் நாமினேட் செய்து வந்தார்கள் ஹவுஸ்மேட்ஸ். கடைசி நாமினேஷனில் கூட அசீம் பெயர் இருந்தது. ஆனால் சொல்லி வைத்தது போன்று ஒவ்வொரு வாரமும் அசீம் காப்பாற்றப்பட்டார். அசீமை உலக நாயகன் கமல் ஹாசன் திட்டுவாரே தவிர ரெட் கார்டு கொடுத்தது இல்லை. அப்பவே தெரியும் இந்த சீசன் வின்னர் அசீம் தான் என பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஷிவினுக்கு டைட்டிலை கொடுக்கலாம். ஆனால் ஷிவினுடன் ஒப்பிடும்போது அசீன் தான் டஃப் பிளேயர் என மேலும் கூறியுள்ளனர்.

Advertisement

Advertisement