• Jul 25 2025

பிரபல தொலைக்காட்சிக்காக ரூ.2000 கோடியை முதலீடு செய்த உதயநிதி ஸ்டாலின்- அடடே இது தான் காரணமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல்யமான நடிகராகவும் அரசியல்வாதியாகவும் வலம் வருபவர் தான் உதயநிதி ஸ்டாலின். இவர் ஒரு கல் ஒரு கண்ணாடி என்னும் படத்தின் மூலம் அறிமுகமாகினார். இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தற்பொழுது நடிப்பதிலிருந்து விலகி விட்டார்.

அதன்படி இவரது இறுதிப்படமாக மாமன்னன் திரைப்படம் காணப்படுகின்றது. இப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவும் காத்திருக்கின்றது. அத்தோடு இவர் ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார். 


இவர் சமீபத்தில் பிளாக் ஷீப் என்ற Youtube சேனலை வாங்கியுள்ளார். அந்த Youtube சேனல் தற்போது தொலைக்காட்சியான மாறியுள்ள நிலையில், அந்த தொலைக்காட்சிக்காகவும், பிளாக் ஷீப் ஓடிடி-காகவும் புதிய படங்களை வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளாராம் உதயநிதி.

இதற்காக ரூ. 2000 கோடி முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஏற்கனவே சில பழைய திரைப்படங்களை இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில், விரைவில் புத்தம்புதிய திரைப்படங்கள் வாங்கி அதனை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர்.  இந்த தகவலை மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement