• Jul 25 2025

பாக்கியலட்சுமி சீரியலில் பிக்பாஸ் அசீம்?- அடடே இந்த சீன்ல வந்திருக்கின்றாரா?- இந்த போட்டோவை பார்த்திருக்கின்றீர்களா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.கணவர்களால் ஏமாற்றப்பட்ட பெண்களுக்கு ஒரு ஊக்கம் கொடுக்கும் வகையில் இந்த சீரியல் அமைக்கப்பட்டுள்ளதால் அந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.

கணவர் ஏமாற்றிவிட்டார், பிரிந்துவிட்டோம் சமூதாயம் என்ன சொல்லும் என இன்றும் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் பெண்களுக்கு இந்த தொடர் முக்கியமானதாக உள்ளது எனலாம்.இந்த சீரியலில் தற்போது பாக்கியா கோபியை விவாகரத்து செய்து தனது குடும்பத்தையும்,  தொழிலையும் கவனித்து வருகிறார்.


அந்த வகையில் இன்று ஒளிபரப்பப்படவுள்ள எப்பிஷோட்டில் பாட்டி, ஜெனி, செல்வி, எழில் ஹாலில் உட்கார்ந்து டிவி பார்க்கிறார்கள்.அதில் பிக்பாஸில் விளையாடிக் கொண்டிருக்கும் அசீம் வரும் காட்சிகள் காட்டப்படுகிறது.அதில் ஷிவானியும இருக்கிறார், எனவே அந்த காட்சி பகல் நிலவு தொடரில் இருந்து எடுக்கப்பட்டிருப்பது தெரிகிறது.

பிக்பாஸில் அசீம் கலந்து கொண்டு பிரபல்யமானதை அடுத்து தான் இதனை ஒளிபரப்பி இருக்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement