• Jul 24 2025

தாலாட்டு சீரியல் நடிகை இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு இவர் தான் காரணமா?- அவரே கூறிய ரகசியம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் பல வருடங்களாக கதாநாயகிப் பாத்திரத்தில் மாத்திரமே அதிகமாக நடித்து வருபவர் தான் ஸ்ருதிராஜ்.இவர் சன்டிவியில் ஒளிபரப்பான தென்றல் சீரியல் மூலம் தான் ரசிகர்களிடையே மிகவும் பிரபல்யமானவர்.

இதனை அடுத்து நீண்ட இடை வெளியின் பின்னர் சன்டிவியில் ஒளிபரப்பாகும் தாலாட்டு என்னும் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகின்றார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது.


இது தவிர அவர் ஆபிஸ் ,அழகு என்று இன்னும் சில சீரியல்களில் நடித்திருக்கின்றார். இவர் சின்னத்திரையில் வர முதல் வெள்ளித்திரையில் ஒளிபரப்பான சில திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்திருக்கின்றார்.

இந்த நிலையில் இவர் அண்மையில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கூறிய விடயம் வைரலாகி வருகின்றது. அதாவது என் வாழ்வில் எதையும் நான் பிளான் செய்தது கிடையாது. அப்படி செய்தாலும் அது சரியாக நடக்காது, அதனால் திருமணம் குறித்து நான் எந்த ஒரு முடிவும் எடுத்ததில்லை. என் வீட்டில் பார்த்துக் கொள்வார்கள், எனக்கு எந்த கவலையும் இல்லை என கூறியுள்ளார்.

மேலும் 41 வயதாகியும் திருமணம் செய்யாமல் ஸ்ருதி இருப்பது ரசிகர்களிடம் பேசப்படும் செய்தியாக வலம் வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement