• Jul 24 2025

காதலர் தினத்தில் தனது காதலனை முதன்முறையாக வெளிப்படுத்தினார் பிக்பாஸ் ஆயிஷா

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களைக் கவரும் விதமாக போல்ட்டான கதாப்பாத்திரங்களில் நடித்து பிரபல்யமான நடிகைகளில் ஒருவர் தான் ஆயிஷா. இவர் ஷு தமிழில் ஒளிபரப்பான சத்யா என்னும் சீரியலில் நடித்ததன் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக் கொண்டார்.


இதன் பின்னர் சமீபத்தில் முடிவடைந்த பிக்பாஸ் சீசன் 6 ஷோவிலும் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் அசீமுடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்தார்.அதில் அவர் தனது சொந்த வாழ்க்கை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதை ரகசியமாகவே வைத்திருந்தார்.


அவர் இரண்டு முறை விவாகரத்து பெற்றவர் என முன்னாள் காதலர் கொடுத்த பேட்டி வைரல் ஆன நிலையிலும் அது பற்றி ஆயிஷா தரப்பு எந்த விளக்கமும் அளிக்கவில்லை.இந்நிலையில் தற்போது ஆயிஷா அவரது காதலர் போட்டோவை வெளியிட்டு காதலர் தின வாழ்த்து கூறி இருக்கிறார்.அதை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.


மேலும் இவர் படத்தில் கமிட்டாகி நடித்து வருவதாகவும் பிக்பாஸிற்குள் மீண்டும் என்ட்ரி கொடுத்திருந்தார். ஆனால் என்ன படம் யாருடைய படம் என்பது குறித்து சொல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement