• Jul 25 2025

சீரியலில் கவனம் செலுத்தும் பிக் பாஸ் பிரபலங்கள்; முக்கிய கதாபாத்திரத்தில் மீண்டும் வந்தார் ஜூலி

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்துமே தங்களது TRP மதிப்பீடு என்ற ஒரு விஷயத்தை வைத்து தான் தங்களின் தொலைக்காட்சி தரத்தை முடிவு செய்து வருகிறது. இதற்காக என்றே பல சீரியல்களை ஒளிபரப்பு செய்து வருகின்றனர். 

அதிலும் குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. அவ்வாறான சீரியல்களில் ஒன்று தான் 'தென்றல் வந்து என்னைத் தொடும்' சீரியல். இந்த சீரியலானது கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. 


இதில் நாயகனாக ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’ சீரியல் நடிகர் வினோத் பாபுவும், நாயகியாக 'ஆபிஸ்' என்ற சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான பவித்ராவும் நடித்து வருகின்றனர். இந்த சீரியலானது விறுவிறுப்பான கதையம்சத்துடனும், அதிரடித் திருப்பங்களுடனும் நகர்ந்த வண்ணம் இருக்கின்றது. 

அந்தவகையில் இதில், கதாநாயகன் வினோத்துடன் நடக்கும் சண்டையும் மோதலும் தொடங்கி, தற்போது கொலைப் பழியினால் வினோத் ஆறு வருடங்கள் சிறையில் தண்டனை அனுபவித்து வெளியில் வந்தமை தொட்டு அனைத்து சம்பவங்களும் பிரமாதம். மேலும் வினோத் என்கிற வெற்றி சிறைக்கு சென்றதால் மனமுடைந்த பவித்ரா ஜனனி என்கிற அபி யாருக்கும் தெரியாமல் வெளியூர் சென்று மாவட்ட ஆட்சியாளராக உள்ளார்.


தற்போது சிறையில் இருந்து விடுதலையாகியிருக்கும் வெற்றி ஒரு குற்றவாளி என்பதினால் இவருக்கும் மாவட்ட ஆட்சியாளருக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையமாக வைத்து கதையானது தற்போது நகர இருக்கிறது. இது இயக்குநரின் வித்தியாசமான இயக்கம் என்று கூறினாலும் பலர் விஜய் மற்றும் சிம்ரன் நடித்த “துள்ளாத மனமும் துள்ளும்” என்ற படத்தை எடுத்து வைத்திருப்பதாக கூறி கலாய்த்து வருகின்றனர். 


இவ்வாறு பல விமர்சனங்கள் வந்தாலும் அவற்றையெல்லாம் தாண்டி இன்றுவரை இந்த சீரியலானது மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. சீரியலைப் பொறுத்தவரையில் பல பிக்பாஸ் பிரபலங்களும் அதில் ஈடுபாடு காட்டி வருகின்றனர். உதாரணமாக கேப்ரியல்லா, தாமரை, ஷிவின் உட்படப் பலரும் சீரியலில் உள்நுழைந்து இருக்கின்றனர்.


இந்நிலையில் மற்றுமொரு பிக்பாஸ் பிரபலமும் தற்போது சீரியலில் உள்நுழைந்து இருக்கின்றார். அதாவது 'தென்றல் வந்து என்னைத் தொடும்' என்ற இந்த சீரியலில் பிக்பாஸ் பிரபலமான ஜூலியும் தற்போது இணைந்து கொண்டுள்ளார். இதனை அறிந்த ஜூலி ரசிகர்கள் மட்டுமல்லாது பிக்பாஸ் ரசிகர்கள் பலரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Advertisement

Advertisement