• Jul 25 2025

“மனதில் நின்ற காதலியே…..” பெப்ரவரி 16 தளபதி விஜய்யின் வாழ்வில் மறக்கமுடியாத நாள்; கொண்டாடும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமாகி தற்பொழுது உச்ச நட்சத்திரமாக வளர்ந்து நிற்பவர் தான் நடிகர் விஜய். இவரது நடிப்பில் தற்பொழுது லியோ என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது.இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்குவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பானது அதிகமாகவே உள்ளது.

இந்த நிலையில் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற பூவே உனக்காக திரைப்படம் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.கடந்த 1996ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16ம் தேதி தியேட்டர்களில் வெளியான இப்படத்தை இயக்குநர் விக்ரமன் இயக்கியிருந்தார்.இப்படத்தில் சங்கீதா, அஞ்சு அரவிந்த் ஆகியோர் ஹீரோயினாக நடித்திருந்தார்கள்.


இந்த படம் விஜய்யின் கெரியரை மாற்றிவிட்டது. அப்படிப்பட்ட பூவே உனக்காக படம் ரிலீஸாகி இன்றுடன் 27 ஆண்டுகள் ஆகிறது. இதையடுத்து #27YearsofPooveUnakkaga என்கிற ஹேஷ்டேக்குடன் ரசிகர்கள் டுவிட் செய்து வருகிறார்கள்


நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. அப்பொழுது பூவே உனக்காக படத்தில் விஜய் பாடிய பாடல் வரிகளை தான் பலரும் பயன்படுத்தினார்கள். அதாவது மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது சோகம் கூட சுகமாகும், வாழ்க்கை இன்ப வரமாகும் என்கிற வரிகள் தான். படம் பழையது என்றாலும் அந்த வரிகள் இன்னும் புதிதாகவே இருக்கிறது. காதலர்களை கவர்ந்த எவர்கிரீன் வரிகள் அவை.


நான் உன்னை அல்ல வேறு ஒருவரை காதலிக்கிறேன் என ஹீரோயின் சொன்னால், உடனே தண்ணி அடித்துவிட்டு சூப் பாடல் பாடும் ஹீரோக்கள் இருக்கும் நிலையில் தன் வலியை மறைத்துக் கொண்டு அந்த பெண்ணின் காதலை வெற்றியாக்கிய விஜய் எப்பொழுதுமே தனி ரகம் தான் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள்.




Advertisement

Advertisement