• Jul 26 2025

திருமணமாகி 10நாளில் பிக்பாஸ் பிரபலம் கைது.. காரணம் நடிகையின் அந்தரங்க வீடியோவை வெளியிட்டமையா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல நடிகை, டான்ஸர் பிக்பாஸ் பிரபலம் எனப் பன்முகத்திறமை கொண்ட ஒருவராகத் திகழ்ந்து வந்தவர் ராக்கி சாவந்த். இவரை நேற்றைய தினம் மும்பை போலீசார் கைது செய்துவிட்டார்கள் என பாலிவுட் நடிகையான ஷெர்லின் சோப்ரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கின்றார். 


அதாவது தன்னுடைய அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்ட ராக்கி சாவந்த் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையித்தில் ஏற்கெனவே புகார் ஒன்றினை அளித்திருந்தார் ஷெர்லின் சோப்ரா.

ஷெர்லின் சோப்ரா அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த மும்பை போலீசார் நடிகை ராக்கி சாவந்தை நேற்று கைது செய்தார்கள். இதனைத் தொடர்ந்து ராக்கி சாவந்திடம் போலீசார் பல கோணத்தில் விசாரணை நடத்தினார்கள். அதுமட்டுமல்லாது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போது ஆஜராக வேண்டும் என்று தெரிவித்து அவரை பின்னர் விடுவித்தார்கள்.


ராக்கி சாவந்த் ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு, தொழிலதிபர் ரித்தேஷ் என்பவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்ட நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக... இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதனை பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே ராக்கி சாவந்த் வெளிப்படையாக எல்லார் முன்பும் தெரிவித்திருந்தார்.


இதைத்தொடர்ந்து அடில் துரானி என்பவருடன் பல நாட்களாக டேட்டிங் செய்து வந்த ராக்கி சாவந்த், தன்னுடைய தாயார் புற்றுநோயால் மருத்துவமனையில் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், திடீரென கடந்த 10 நாட்களுக்கு முன்பாக காதலனை கரம் பிடித்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதையடுத்து தற்போது ராக்கி சாவந்த்தை போலீசார் கைது செய்து பின்பு விடுவித்த சம்பவமும் திரையுலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. மேலும் ராக்கி சாவந்த் மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement