• Jul 24 2025

துணிவு பட வாய்ப்பை தவறவிட்டாரா? பிக் பாஸ் பிரபலம்

ammu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித்குமார் கடந்த சில வருடங்களாக நல்ல கதைகளை தேர்ந்து எடுத்து நடித்து வருகிறார் அந்த கதையில் சமூக அக்கறை உள்ள கருத்துக்கள் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது. 


அஜித்துக்கு எவ்வளவு தான் ரசிகர்கள் இருந்தாலும் மேலும் அவர்களின் மனதை கவரும் எண்ணத்திலேயே இப்படி நல்ல கதைகளை தேடி தேடி நடிக்கிறார். அந்த வகையில் நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் சமீபத்தில் துணிவு போன்ற திரைப்படமும் அடங்கும். 


பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக வெளியான துணிவு படத்தில் ஆக்சன், மாஸ், காமெடியையும் தாண்டி சமூக கருத்துக்கள் இடம் பெற்றதால் ரசிகர்ககள் மற்றும் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


தொடர்ந்து சிறப்பாக ஓடியதால் இதுவரை 260 கோடிக்கு மேல் வசூலில் ருத்ர தாண்டவம் ஆடியது என தகவல்கள் வெளிவருகின்றன.  தற்பொழுது OTT தளத்திலும் வெளியாகி அடுத்தடுத்த சாதனைகளை நிகழ்த்தி வருகிறதாம் இதனால் நடிகர் அஜித்தும் துணிவு படக்குழுவும் செம்ம மகிழ்ச்சியில் இருக்கின்றனர். 


இப்படி இருக்கின்ற நிலையில் துணிவு திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபத்திரத்தில் பிரபல நடிகர் நடிக்க வேண்டும். அதை மிஸ் செய்து விட்டார் என சமூக வலைதள பக்கத்தில் ஒரு பெரிய செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது.


இந்த படத்தில் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். அவர்களில் ஒருவர் தர்ஷன் துணிவு திரைப்படத்தில் ஒரு யதார்த்தமான கதாபாத்திரத்தில் நடித்து கைத்தட்டல் வாங்கினார்.


ஆனால் அந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நம்ம பிக் பாஸ் கவின் தான் என சிலர் சமூக வலைதள பக்கத்தில் சொல்லி வைரலாக்கி வருகின்றனர் ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. 


Advertisement

Advertisement