• Jul 24 2025

தனத்தின் நடவடிக்கைகளால் அதிர்ச்சிக்குள்ளான மீனா - கிண்டல் செய்யப்பட்ட மூர்த்தி எடுத்த முடிவு என்ன?

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலை சில நாட்களாகவே ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். இதற்கு காரணம் மீனாவைத் தவிர எல்லோரும் கர்ப்பமாக இருப்பதே ஆகும். அந்த வகையில் இன்றைய தினம் இந்த சீரியலில் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

கண்ணன் ஐஸ்வர்யாவுக்கு அட்வைஸ்ட் பண்ணுகின்றார்.அதே போல கதிரும் முல்லைக்கு அட்வைஸ்ட் பண்ணுகிறார். இதனைப் பார்த்த மூர்த்தி தனத்திடம் போய் சொல்லுகின்றார்.நீயும் கவனமாக இரு என்று சொல்ல தனம் இதை முதலில் எல்லோருக்கும் போய் சொல்லுங்க என்று கூறுகின்றார்.


தொடர்ந்து தனத்தின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருப்பதாக மீனா சந்தேகப்படுகின்றார்.பின்னர் மூர்த்தி அனைவரையும் கூப்பிட்டு தனம் கர்ப்பமாக இருப்பதைத் தவிர ஏதேதோ கதை சொல்ல அனைவரும் சலிப்படைந்து மூர்த்தியை கலாய்த்து தள்ளினார்கள்.பின்னர் தனத்தின் அண்ணியும் அம்மாவும் தனத்தை பார்க்க பழங்கள் வாங்கிக் கொண்டு வருகின்றார்கள்.


இதனால் அதிர்ச்சியடைந்த தனம் அண்ணி ஏதாவது சொல்லி விடப்போகின்றார் என அவரை உள்ளே அழைத்துச் லெ்கின்றார்.இவர்களின் நடவடிக்கையைப் பார்த்து தனமும் ஐஸ்வர்யாவும் அதிர்ச்சியடைகின்றனர். இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகின்றது எனலாம்.


Advertisement

Advertisement