• Jul 25 2025

கோலாகலமாக பிறந்தநாளைக் கொண்டாடிய பிக்பாஸ் ஐக்கி பெர்ரி- வைரலாகும் பேர்த்டே கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!


பன்முகத் திறமை கொண்ட ஐக்கி பெர்ரி ஐந்தாவது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். ஆரம்பத்தில் இவரைப் பார்த்ததும் பல ரசிகர்கள் இவர் வெளிநாட்டில் சேர்ந்தவராக இருப்பார் என்று நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் இவர் ஒரு தஞ்சாவூரை சேர்ந்த பெண் என்பது பின்புதான் பலருக்கும் தெரிய வந்தது.


ஒரு மருத்துவர் ஆகவும், ராப் பாடகராகவும், டான்ஸராகவும், மாடலிங் பெண்ணாகவும், தன்னால் எல்லாத்துறையிலும் கலக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டி வருகின்றார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு ஏற்பட்ட தன்னுடைய காதல் தோல்வியால் இவர் துவண்டு போய்விடாமல் தன்னுடைய ஒவ்வொரு முயற்சியிலும் முன்னேறி வருகின்றார்.


பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிகமான நெகட்டிவ் கமெண்டுகள் பெறாமல் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய போட்டியாளர்களில் ஒருவராக ஐக்கி பெர்ரி இருந்து வருகிறார். அத்தோடு சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பதிவிட்டு வருவார்.


அந்த வகையில் தற்பொழுது தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார். இது குறித்த புகைப்படங்களை தன்னுடைய சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement