• Sep 09 2025

'ஜெயிலர்' படம் பார்க்க அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் வாறார்... தொடரும் ப்ளூ சட்டை மாறனின் அலப்பறை.. வைரல் வீடியோ இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டாரின் எந்தப் படம் வெளியானாலும் அதனை ரசிகர்கள் கொண்டாடி வருவது வழமை. அந்தவகையில் நேற்றைய தினம் 'ஜெயிலர்' திரைப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது. 


அதாவது மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரிப், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, ரோபோ சங்கர், தமன்னா என பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 


இந்நிலையில் எந்தப் படம் வெளியானாலும் தனது விமர்சனத்தை கூறும் ப்ளூ சட்டை மாறன் 'ஜெயிலர்' படத்திற்கும் தன்னுடைய விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார்.


அந்தவகையில் தற்போதும் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டு "LIC ஹைட்டு. தலைவன்தான் வைட்டு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜெயிலர் பார்க்க இன்று கோயம்பேடு ரோகிணிக்கு வருகிறார், ஆஸ்காரை கால்ல போட்டு மிதிப்பான் என் தலைவன், ப்ரூஸ் லீ.. என் தலைவன் கால்ல விழறான்" போன்ற வசனங்களை இப்பதிவின் மூலமாக கிண்டல் செய்திருக்கார்.

இதோ அந்த வீடியோ..!


Advertisement

Advertisement