• Jul 26 2025

என்னது கமலிற்கு பிக்பாஸ் ராம் ரூ.50 லட்சம் கொடுத்திருக்காரா... வெளியான வீடியோ.. சந்தேகத்தில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது 5 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில் இதன் 6ஆவது சீசனானது தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இதில் சீசன் 5 ஐ பொறுத்தவரை அதில் பங்கேற்றவர்கள் பெரும்பாலானோர் கருத்துச் சொல்லாமல் கோஷ்டி அமைத்துக்கொண்டு செயல்பட்டனர். 

இதனால் அந்த சீசன் மீது சமூக வலைதளங்களில் விமர்சனம் அதிகமானது. இதனைத் தொடர்ந்து சீசன் 6 தொடங்கிய போதிலிருந்தே பிக்பாஸ் ஏராளமான டாஸ்க் கொடுத்து சுவாரஸ்யமாக்கினார். அந்த வகையில் கமல்ஹாசனும் எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு இந்த சீசனில் போட்டியாளர்களிடம் நேரடியாக குறை நிறைகளை கூறி விளாசி வருகின்றார். 


இந்நிலையில் தற்போது  வெளியாகி உள்ள ஒரு வீடியோ ஆனது சர்ச்சைக்குரியதாக மாறி உள்ளது. அதாவது ஒரு இடத்தில் அசீம், ராம், ரொபேர்ட் மாஸ்டர் ஆகியோர் இருந்து பேசிக் கொண்டிருக்கின்றார்கள். அந்த சமயத்தில் ரொபேர்ட் மாஸ்டர் "ட்ரஸ்க்கே 15 லட்ஷம் செலவு பண்ணினவன் கமல் சாருக்கு 50 லட்ஷம் செலவு பண்ண மாட்டானா" எனக் கேட்கின்றார்.


அதற்கு உடனே அசீம் "நீ என்ன கமல் சாருக்கு 50 லட்ஷம் கொடுத்தியா" எனக் கேட்கின்றார். அதற்கு உடனே ராம் "ஏய் இதெல்லாம் தப்பு இப்படி பேசாதீங்க" எனக் கூறுகின்றார். 

இந்த உரையாடல் ஆனது இவர்களுக்குள் கிண்டலாக இடம்பெற்றிருப்பினும் இவர்களின் இந்தப் பேச்சு பிக்பாஸ் ரசிகர்கள் பலரிடையேயும் சந்தேகத்தை தூண்டி உள்ளது. அதாவது இவர்கள் அனைவருமே வெளியில் இத்தனை ரூபாய் பணத்தினை செலவு செய்து தான் இந்த இடத்திற்கு வந்திருப்பார்களா எனக் கேட்டு வருகின்றனர். 


Advertisement

Advertisement