• Jul 25 2025

ராஷ்மிகா இனிமேல் படங்களில் நடிக்க முடியாது... திடீர்த் தடை விதித்த திரையுலகம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாகத் திகழ்ந்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இருப்பினும் இவர் கன்னட திரையுலகில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான 'கிரிக் பார்ட்டி' என்ற படம் மூலம் தான் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.


அப்படமானது பெரியளவில் ஹிட் ஆனதைத் தொடர்ந்து ராஷ்மிகாவிற்கு தெலுங்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து தெலுங்கில் அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக இணைந்து நடித்து தற்போது அங்கு டாப் நடிகைகளில் ஒருவராக உயர்ந்து விட்டார் ராஷ்மிகா.

அதுமட்டுமல்லாது இந்தியில் 3 படங்கள் தமிழில் விஜய்க்கு ஜோடியாக 'வாரிசு' எனப் பல படங்களை கைவசம் வைத்திருக்கும் இவர் பான் இந்தியா நடிகையாக தற்போது பட்டையைக் கிளப்பி வருகிறார்.

எது எவ்வாறாயினும் ராஷ்மிகா, சமீப காலமாக தெலுங்கு, இந்தி, தமிழ் போன்ற மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாகத் திகழ்ந்து வந்தாலும், தன்னை அறிமுகப்படுத்திய கன்னட திரையுலகம் பக்கம் தலைகாட்டாமல் நீண்டகாலமாக இருந்து வருகிறார்.


இந்நிலையில் தான் தற்போது கன்னடத் திரையுலகம் தற்போது திடீர் முடிவு ஒன்றினை முன்வைத்து இருக்கின்றது. அதாவது ராஷ்மிகா இனிமேல் கன்னட திரைப்படங்களில் நடிக்கவும், அவர் நடித்த படங்களை கன்னடத்தில் ரிலீஸ் செய்யவும் தடைவிதிக்க கர்நாடக திரையரங்க உரிமையாளர்களும், கன்னட திரைத்துறையினரும் முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் ஒன்று ட்விட்டரில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


அந்தவகையில் திரையுலக சினிமாவில் நடிகையாக அறிமுகப்படுத்திய கன்னட திரையுலகை நடிகை ராஷ்மிகா, தொடர்ந்து இழிவு படுத்தி வருவதே இந்த திடீர் முடிவுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாது சமீபத்தில் பாலிவுட் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியின் போது கூட ராஷ்மிகா தனது முதல் கன்னட படத்தை யார் தயாரித்தது என்றே தெரியாது என்பதுபோல நடிகை கீழ்த்தரமாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


மேலும் ராஷ்மிகா மீதான இந்தத் தடை உறுதி செய்யப்பட்டால் விஜய்க்கு ஜோடியாக அவர் நடித்துள்ள வாரிசு திரைப்படம் கர்நாடக மாநிலத்தில் ரிலீசாவதில் அதிகளவில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

அத்தோடு இதன் வாயிலாக அவரது பான் இந்தியா நடிகை அந்தஸ்து பறிபோகவும் வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில் ராஷ்மிகா குறித்த இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் தற்போது பேசு பொருளாக மாறி இருக்கின்றது.

Advertisement

Advertisement