• Jul 25 2025

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியினை இத்தனை கோடி மக்கள் பார்த்திருக்கின்றார்களா?- இறுதி நாளில் வெளியாகிய தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான  பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 21 நபர்கள்  பங்கேற்றனர்.இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.

 இதனையடுத்து, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ராம் மற்றும் ஜனனி, தனலெட்சுமி, மணிகண்ட ராஜேஷ், ரச்சிதா, ஏடிகே ஆகியோர் எலிமினேட் ஆனார்கள்.இறுதி போட்டிக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து அசிம், விக்ரமன், ஷிவின் உள்ளிட்ட 3 போட்டியாளர்கள் தகுதி பெற்றனர்.


நேற்று நடந்த இறுதி போட்டியில் முதல் நபராக ஷிவின் எலிமினேட் ஆனார். பின்னர் விக்ரமன் & அசீம் இடையே ஒருவர் பிக்பாஸ் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி அசீம் இந்த சீசனில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக நடிகர் கமல்ஹாசனால் அசீம் அறிவிக்கப்பட்டார்.


வெற்றியாளர் அறிவிக்கப்படுவதற்கு முன் விஜய் டிவியின் தலைமை அதிகாரி கிருஷ்ணன் குட்டி மேடை ஏறினார். அப்போது அவரிடம் நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை கண்டு களித்துள்ள மக்களின் எண்ணிக்கை எவ்வளவு என கேட்டார். இதற்கு பதில் அளித்த கிருஷ்ணன் குட்டி, "30 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை கண்டு களித்துள்ளனர்" என பதில் கூறினார். இதன் மூலம் 3 கோடிக்கும் அதிகமானோர் பிக்பாஸ் நிகழ்ச்சியை கண்டு களித்துள்ளனர் என அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது.


Advertisement

Advertisement