• Jul 25 2025

அடுத்த மாதம் மனைவிக்கு பிரசவம் – மனைவியுடன் அழகிய போட்டோ ஷூட் நடத்திய இயக்குநர் அட்லி

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குநரான ஷங்கரின் துணை இயக்குநராக இருந்து ராஜா ராணி என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் அட்லி. தனது முதலாவது படத்தின் மூலமே தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் சேர்த்துக் கொண்டார்.


பின்னர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என 3 வெற்றிப்படங்களை கொடுத்தார்.இப்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற திரைப்படம் இயக்கியுள்ளார்,


 படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி இருந்தது.இந்த நேரத்தில் தான் அட்லி ரசிகர்களுக்கு இன்னொரு மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்தார். அதுவேறு ஒன்றும் இல்லை அவரது மனைவி பிரியா கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்துடன் அறிவித்தார்.


தற்போது பிரியா சீமந்த நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஷேர் செய்து எங்களது வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் என பதிவு செய்துள்ளார்.பிரியாவின் சீமந்த நிகழ்ச்சிக்கு நடிகர் விஜய்யும் சென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement