• Jul 25 2025

ரசிகர்கள் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன்-6 ப்ரமோ…தொகுப்பாளர் இவர் தானாம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நெதர்லாந் நாட்டின் ‘பிக் பிரதர்’ நிகழ்ச்சியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியானது இந்தியாவில் முதலில் ஹிந்தியில் அறிமுகம் செய்யப்பட்டது.எனினும் அதனை தொடர்ந்து, தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் என்று பல மொழிகளில் நடத்தப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கே உலகம்முழுவதும் பார்வையாளர்கள் உள்ளார்கள்.

அத்தோடு தமிழில் கடைசியாக பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நடைபெற்று முடிந்தது. இதில் ராஜூ பிக் பாஸ் டைட்டிலை தட்டி சென்றார். அவரை தொடர்ந்து பிரியங்கா இரண்டாவது இடத்தை பிடித்தார்.

இதற்கிடையே ரசிகர்கள் அனைவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் 6-யை எதிர்பார்த்து பார்த்து வருகிறார்கள். ஆனால் தற்போது தெலுங்கு பிக் பாஸ் சீசன் 6 ப்ரமோவை வெளியிட்டு விரைவில் இந்நிகழ்ச்சி தொடங்கவுள்ளதை தெரிவித்துள்ளனர்.

மேலும் நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி அங்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தற்போது தமிழ் பிக் பாஸின் அடுத்த சீசனும் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதோ அந்த நிகழ்ச்சியின் ப்ரமோ

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement