• Jul 23 2025

பாலாஜியுடன் தனிமையில் பிறந்தநாளைக் கொண்டாடிய பிக்பாஸ் ஷிவானி- திருமணம் எப்போ என்று கேட்டு வரும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் ஹீரோயினாக நடித்து வந்த ஷிவானி நாராயணன் இன்ஸ்டாகிராமில் டான்ஸ் ஆடியும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டும் 4 மில்லியன் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.


இன்று தனது 22வது பிறந்தநாளை கொண்டாடி வரும் ஷிவானி நாராயணன் ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் பார்ட்டி நடத்திய போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். கால் மேல் கால் போட்டு தொடையழகு தெரிய படு கவர்ச்சியாக இருக்கும் போட்டோக்களை ஷேர் செய்த ஷிவானி நாராயணன் தான் மட்டுமே இருக்கும் புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டுள்ளார்.


பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட ஷிவானி நாராயணனும் பாலாஜி முருகதாஸும் இன்றளவும் நட்பாக நெருங்கி பழகி வருகின்றனர்.


ஷிவானி நாராயணன் தனது பர்த்டே பார்ட்டியில் யாரும் கலந்து கொண்டது போல காட்டிக் கொள்ளாத நிலையில், ஷிவானியின் தோள் மீது கைப்பட்டு அவருடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு பிறந்தநாள் பார்ட்டியில் தானும் கலந்துக் கொண்டேன் என்பதை பாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிப்படுத்தி உள்ளார்.


பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வரும் ஷிவானி நாராயணன், விக்ரம், வீட்ல விசேஷம், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், டிஎஸ்பி, பம்பர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.


இந்நிலையில், 22வது பிறந்தநாளை ஷிவானி பாலாவுடன் கொண்டாடிய நிலையில், இருவரும் டேட்டிங் செய்து வருகின்றனர் என்றும் சூப்பர் ஜோடி என்றும் சீக்கிரமே கல்யாண சாப்பாடு போடுங்க என ஏகப்பட்ட கமெண்ட்டுகளை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement