• Jul 24 2025

இசையமைப்பாளர் வித்யாசாகருக்கு இப்படி ஒரு அழகான மகனா...? திடீரென வைரலாகும் புகைப்படம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சீதா என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 1990 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் இசையமைப்பாளர் வித்யாசாகர். இதனையடுத்து இவர் தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி திரைப்படங்களிலும் பணியாற்றி வந்தார்.


அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவின் 2000-களில் தற்போது உள்ள அனைத்து டாப் ஹீரோ திரைப்படங்களிலும் பணியாற்றி இருக்கிறார் வித்யாசாகர். அதாவது விஜய், விக்ரம், அஜித், சூர்யா எனப் பல நடிகர்களின் திரைப் பயணத்தில் பெரிய ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார் வித்யாசாகர். மேலும் இவர் தனது மெலோடி பாடல்கள் மூலம் Melody King எனவும் ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.


இந்நிலையில் வித்யாசாகர் அண்மையில் பாடல் நிகழ்ச்சியான சூப்பர் சிங்கரில் கலந்துகொண்டார். இன்னொரு முக்கிய விடயம் என்னவெனில் அந்நிகழ்ச்சியில் அவரது மகன் முதன்முறையாக கலந்துகொண்டார். அதுமட்டுமல்லாது நிகழ்ச்சியில் ஒரு பாடலையும் பாடி அசத்தியிருந்தார். 


இதனையடுத்து அவரது மகனின் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனைப் பார்த்த ரசிகர்கள் அவரின் மகன் ஹீரோ போல் இருப்பதாக கூறி வருகின்றனர்.


Advertisement

Advertisement