• Jul 25 2025

பிக் பாஸ் டைட்டில் வின்னரான அசீம்- பாராட்டிய கமல்- அடடே இத்தனை லட்சம் பெறுமதியான பரிசில்கள் கிடைத்திருக்கின்றதா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


பிக் பாஸ் போட்டியாளரான அசீமுக்கு பரிசை கொடுத்து, மக்களுக்கு உங்களைப் பிடித்திருக்கிறது என்று பாராட்டினார்.

பிக் பாஸ் சீசன் 6ன் டாப் த்ரீ போட்டியாளர்களாக அசீம் ,விக்ரமன்,ஷிவின் இருக்கின்றனர். மாலை 6 மணி முதல் ஆட்டம் பாட்டத்துடன் பிக் பாஸ் கிராண்ட் பினாலே நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது.


இதில், எலிமினேட் ஆகி வெளியில் சென்ற போட்டியாளர்கள் ஸ்டைலாக உடை அணிந்து வந்திருந்தார்கள். அவர்களை வரவேற்ற கமல், உங்களுக்கு வெளியில் மக்களிடம் வரவேற்பு எவ்வாறு இருந்தது என்று கேட்டார். இதற்கு பதில் அளித்த ஜனனி மீண்டும் ஊருக்கு செல்ல முடியாத அளவுக்கு பட வாய்ப்பு வந்து இருப்பதாக கூறினார்.


இதையடுத்து, 3 லட்சத்துடன் வெளியேறிய கதிர், இந்த பணத்தை யாரும் எடுக்க வேண்டாம், இன்னும் பணம் அதிகரிக்கும் என்றார்கள். ஆனால், நான் இதுநாள் வரை இந்த வீட்டில் இருந்ததே பெரிசு என்பதால் எடுத்தேன் என்றார். இதையடுத்து, பேசிய அமுதவாணன், பைனல் வரை வந்து இந்த மேடையில் நிற்க ஆசைப்பட்டேன், ஆனால் பணத்தேவை இருந்ததால், 11,75,000 பணத்தை எடுத்தேன் என்றார்.

இதையடுத்து,பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களை பார்க்க உள்ளே சென்ற கமல், அவர்களுக்கு தெரியாமல் உள்ளே வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். சலசலப்பு, சண்டை, சர்ச்சரவுக்கு மத்தியில் துவண்டு போகாமல் 106 நாட்களை இருந்தது பாராட்டுக்குரியது என்று மூன்று பேரையும் மனதார பாராட்டினார். இதையடுத்து, அசீம், விக்ரமன், ஷிவின் மூன்று பேருக்கும் கமல் ஹாசன் எழுதிய கடிதத்தை ஃபிரேம் போட்டு பரிசாக வழங்கினார். மேலும், மூவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.


அசீமுக்கு கமல் கொடுத்த பரிசில், அன்புத்தம்பி என அசீமுக்கு உங்கள் தளராத தன்முனைப்பும் தன்னம்பிக்கையும் பாராட்டுதலுக்கு உரியவை, அத்தனை விமர்சனங்களையும் தாண்டி இறுதி இலக்கை எட்டி இருக்கிறீர்கள். தவறுகளில் இருந்து திருத்திக் கொண்டு உங்களை மாற்றிக் கொள்ள முயற்சித்திருக்கிறீர்கள். மக்களுக்கு உங்களைப் பிடித்திருக்கிறது. அசீம் தன்னை அசீமாக வெளிப்படுத்திக் கொண்டதற்கு சிலர் கொடுத்த பரிசு இது. நீங்கள் உழைத்து உயர வாழ்த்துகள் என கமல் பாராட்டி இருந்தார். தொடர்ந்து மூவரும் கமல் சேர் முன்னாடி அழைத்து வரப்பட்டனர்.


பின்னர் மக்களிின் அதிக வாக்குகளைப் பெற்ற அசீமுக்கு முதல் இடமும், விக்ரமனுக்கு இரண்டாவது இடமும், ஷிவினுக்கு மூன்றாவது இடமும் கிடைத்துள்ளது. இதில் வெற்றி பெற்ற அசீமுக்கு 50 லட்சம் பணமும் மற்றும் கார் ஆகிய வழங்கப்பட்டது.அத்தோடு இரண்டாம் இடத்தைப் பெற்ற விக்ரமனுக்கும் தனது வாழ்த்துக்களை கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். இவ்வாறு போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்களின் வாழ்த்துக்களுடன் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியானது முடிவுக்கு வந்தது.


Advertisement

Advertisement