• Jul 26 2025

காலம் பூராவும் போராடிக் கொண்டிருப்பேன்- டைட்டிலை தவறவிட்டாலும் சோர்வடையாமல் பேசிய விக்ரமன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றங்கள் நடைபெற்ற பிறகு வீட்டுக்குள் அசீம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய மூவர் மட்டுமே எஞ்சி இருந்தனர்.நேற்று நடைபெற்ற கிராண்ட் ஃபினாலே-வில் கமல் வீட்டில் இருந்து வெளியேறி இருந்த போட்டியாளர்களிடம் பேசினார். அவர்களது பிக்பாஸ் வீடு பற்றிய அனுபவங்கள் குறித்து கேள்வியும் எழுப்பி இருந்தார். அப்போது ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுடைய அனுபவங்கள் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசி இருந்தனர்.

இதனிடையே பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற கமல் ஹாசன் அங்கு பிக்பாஸ் கோப்பையை அறிமுகம் செய்தார். அதன்பின்னர் மூவருக்கும் தான் எழுதிய கடிதத்தையும் கொடுத்தார். அதன் பின்னர் பிக்பாஸ் பிக் பாஸ் வீட்டில் கடைசியாக இருந்த மூன்று பேரான அசிம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர் ஃபினாலே மேடைக்கு வந்திருந்தனர்.தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல்முறையாக மூன்று பேர் ஃபினாலே மேடைக்கு வருவது இதுவே முதல் முறை. 


அப்படி ஒரு சூழலில் மூன்று போட்டியாளர்கள் குடும்பத்தினர் மத்தியில் அவர்களின் விருப்பமான போட்டியாளர்கள் யார் என்பதையும் கமல்ஹாசன் கேட்டு தெரிந்து கொண்டார். இதற்கடுத்து விக்ரமன், அசிம் மற்றும் ஷிவின் ஆகிய மூன்று பேரில் லைட் வரும் நபர் வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டார். அந்த வகையில் ஷிவின் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

இத்தனை நாட்கள் மிகவும் விறுவிறுப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வந்த ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் பலருக்கும் தங்களுக்கு விருப்பமான இரண்டு பேர் இறுதி மேடையில் இருந்தது, பெரும் உற்சாகத்தை கொடுத்திருந்தது. அப்போது பிக்பாஸ் சீசன் 6-ன் வெற்றியாளர் அசீம் என அறிவித்தார் கமல்ஹாசன். இதனையடுத்து பார்வையாளர்கள் உற்சாகமாக ஆராவாரம் செய்தனர்.


வெற்றியாளர் அறிவிப்புக்கு பின்னர் பேசிய விக்ரமன்,"காலம் பூராவும் போராடிக் கொண்டிருக்கும் போராட்ட குணம் நிறைந்தவன் நான். என் போராட்டம் தொடரும். உலகம் முழுவதும் இருக்கும் தாய் தமிழ் சொந்தங்களின் தீர்ப்பை வணங்கி ஏற்றுக்கொள்கிறேன்." என உருக்கத்துடன் குறிப்பிட்டார். அப்போது அங்கு அமர்ந்திருந்த போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் கரகோஷம் எழுப்பி அவரை உற்சாகப்படுத்தினர்.


Advertisement

Advertisement