• Jul 23 2025

ஓட்டு விஷயத்தில் பிக்பாஸ் வைத்த திடீர் டுவிஸ்ட்...இதுவரைக்கும் நிகழாத சம்பவம்...ஷாக்கில் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் குறைவான ஓட்டு யாருக்கு கிடைத்திருக்கிறதோ அந்த போட்டியாளர் எலிமினேட் செய்யப்படுவார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியிலும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார்.அதாவது  மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் குறைவான ஓட்டு யாருக்கு கிடைத்திருக்கிறதோ அந்த போட்டியாளர் எலிமினேட் செய்யப்படுவார். இந்த நடைமுறை தான் கடந்த 6 சீசன்களாக பேணப்பட்டு வருகின்றது.

அதேபோல் திங்கட்கிழமை ஆரம்பமாகும் ஓட்டிங் நடைமுறை வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை நடைபெறும். மேலும் இந்த 5 நாட்கள் பதிவான வாக்குகளின் அடிப்படையில் தான் வெளியேற்றுப் படலம் நடக்கும்.

ஆனால் இந்த வாரம் ஓட்டு போடும் நாள் 5-ல் இருந்து நான்கு நாட்களாக குறைக்கப்பட்டு உள்ளது. அதன்படி வெள்ளிக்கிழமைக்கு பதிலாக இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முடியுமென அறிவிக்கப்பட்டு உள்ளது.


மேலும் இந்த வார நாமினேஷன் பட்டியலில் தனலட்சுமி, ஷிவின், விக்ரமன், அசீம், மைனா, ரச்சிதா, கதிரவன் ஆகிய 7 பேர் இடம்பெற்று உள்ளனர். தற்போதைய நிலவரப்படி இதில் அசீம் மற்றும் விக்ரமன் ஆகியோர் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிப்பதால், இவர்கள் இருவரும் எலிமினேட் ஆக வாய்ப்பில்லை.

ஆனால் எஞ்சியுள்ள 5 பேருக்கும் குறைந்த அளவிலான வாக்கு வித்தியாசமே உள்ளதால், அவர்கள் 5 பேரில் ஒருவர் தான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகிறார். அத்தோடு தற்போதைய நிலவரப்படி தனலட்சுமி தான் கடைசி இடத்தில் உள்ளார். இதே நிலை நீடித்தால் இந்த வாரம் தனலட்சுமி வெளியேற்றப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

Advertisement

Advertisement