• Jul 23 2025

மனைவி குடும்பத்தாரிடம் அடிவாங்கிய ராமராஜன்.. நளினியை பிரிந்ததிற்கு என்ன காரணம்...அவரே கூறிய தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

80களில் இருந்து இன்று வரை தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்துள்ள நடிகை தான் நளினி.1981ம் ஆண்டு வெளியான ராணுவ வீரன் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.இப்படத்தைத் தொடர்ந்து ஓம் சக்தி, சரணாலயம், மனைவி சொல்லே மந்திரம், தங்கைக்கோர் கீதம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் 100 படங்களுக்கு மேல் நடித்த இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிகளிலும் நடித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து 2000ம் ஆண்டுகளில் சின்னத்திரை சீரியல்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.



அந்த வகையில் கோலங்கள், சின்ன பாப்பா பெரிய பாப்பா, மாதவி, வாணி ராணி, சந்திரலேகா, கோகுலத்தில் சீதை போன்ற பல ஹிட் படங்களில் நடித்திருக்கின்றார்.தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வள்ளி திருமணம்  மற்றும் ரஜினி என்ற தொடரில் நடித்து வருகிறார்.

இவ்வாறுஇருக்கையில் ராமராஜன் உதவி இயக்குநராக இருக்கும் போதே நடிகை நளினி மீது ஒருதலைக் காதல் இருந்ததாம். இந்த விஷயம் நளினி குடும்பத்திற்கு தெரியவந்ததால் ராமராஜனை பிடித்து அடித்துவிட்டனர். இதனால் நளினி தமிழ் திரைத்துறையில் இருந்து விலகி இருந்தார். பின்னர் ஒரு வருடம் கழித்து சென்னைக்கு வந்த அவர், ராமராஜனை திருமணம் செய்து கொண்டார்.



நன்றாக போய் கொண்டிருந்த இவர்களின் திருமண வாழ்க்கை கருத்து வேறுபாடு காரணத்தால் 2000 -ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.

இந்நிலையில் பேட்டி அளித்த நளினி தனது திருமண வாழ்க்கை பற்றி பேசியிருந்தார். மேலும் அதில் அவர், " நான் திருமணம் ஆகி சில வருடங்களுக்கு பிறகு என்னுடைய தாய் ஜோசியம் பார்க்க அழைத்து சென்றார்கள். அப்போது ஜோசியத்தில் நான் திருமணம் ஆகி சில ஆண்டுகளில் பிரிந்துவிடுவோம் என கூறினார்கள்.

இதைப்போல பலரும் பேசினார்கள். அதனால் சண்டை போட்டு பிரிய வேண்டாம் என்பதற்காக நாங்களே சந்தோசமாக பிரிந்துவிட்டோம்" என கூறியிருந்தார்.

Advertisement

Advertisement