• Jul 25 2025

இரத்தம் சிந்திய அசீம்-பயந்து ஓடும் போட்டியாளர்கள்- வெளியான ப்ரமோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஆறாவது சீசனில் ஒவ்வொரு எபிசோடும் அசத்தலாக சென்று கொண்டிருக்கின்றது.இந்த வாரம் நடைபெற்று வரும் டாஸ்க்கில் போட்டியாளர்கள் ஏலியன்களாகவும், ஆதிவாசியாகவும் இரு அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர். 

இந்த டாஸ்கை  போட்டியாளர்கள் சண்டை சச்சரவுகளுடன் விளையாடி வருகின்றனர். அதிலும் குறிப்பாக அசீம் மற்றும் அமுதவாணனுக்கிடையிலான மோதல் அடிதடி வரை சென்றுள்ளது.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில் அசீம் எடுத்த ஏலியன் அணியினரின் பூவை தேவைப்படாது என்று கூறிவிட்டு பாத்ரூமிற்குள் கொண்டு போய் வைக்கின்றார்.இதனை கேமரா முன் கூறிவிட்டு அமுதவாணனுக்கும் சொல்லி விடுகின்றார்.

இதனால் அமுதவாணன் ஒரு பொம்மை போல் செய்து அதனிடம் கூறினால் எடுத்தவர்களுக்கு இரத்தம் வரும் எனக் கூற அதே போல் அசீமிற்கு இரத்தம் வந்து விட்டது எனக் கூறி நடிக்கிறார்கள்.இதனால் பயமடைந்த மற்றைய போட்டியாளர்கள் பயந்து ஓடுகிறார்கள்.இவ்வாறு கலக்கலாக தற்போதைய ப்ரமோ வெளியாகி உள்ளது.

இதோ ப்ரமோ..


Advertisement

Advertisement