• Jul 26 2025

மனைவியைப் பிரிந்த தனுஷ்... தற்போது இந்த நடிகையின் கட்டுப்பாட்டிலா... வெளியானது பரபரப்புத் தகவல்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். முதல் முறையாக இவர் நடித்துள்ள நேரடி தெலுங்கு படமான 'வாத்தி' திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், தற்போது தனுஷ் 'கேப்டன் மில்லர்' படத்தின் படப்பிடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.


அதுமட்டுமல்லாது பிரபல தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள, திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்தது. இதில் தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. 

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் பிரமாண்டமாக இப்படம்  உருவாக உள்ள நிலையில் விரைவில் இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர் - நடிகைகள் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து, இன்னும் மூன்று நேரடி தெலுங்கு திரைப்படங்களில் தனுஷ் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். 


இவ்வாறாக தொடர்ந்து தமிழ் பட இயக்குநர்களை தவிர்த்து தனுஷ் தெலுங்கு திரையுலகின் பக்கம் சாய்ந்து வருவது, கோலிவுட் ரசிகர்களை உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இதற்கு பின்னணியில் பிரபல நடிகை சாய் பல்லவி உள்ளதாக பிரபல சினிமா விமர்சகர் கூறியுள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அதாவது ஐஸ்வர்யாவின் விவாகரத்துக்கு பின்னர், தனுஷ் தன்னுடைய குடும்பத்தினரிடம் கூட அதிகம் பேசாமல் இருக்கும் நிலையில், நடிகை சாய்பல்லவின் கட்டுப்பாட்டில் தான் தற்போது இருப்பதாகவும், அவர் தனக்கு தெரிந்த தெலுங்கு பட இயக்குநர்களிடம் சிபாரிசு செய்து தான் தனுஷுக்கு தெலுங்கு பட வாய்ப்புகளை பெற்று தந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. 


அதுமட்டுமல்லாது சாய் பல்லவி என்ன சொன்னாலும், அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் தனுஷும் தலையாட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது இணையத்தில் தீயாய் பரவ, இதன் காரணமாக தான் ஐஸ்வர்யா - தனுஷ் விவாகரத்து நேர்ந்ததா? என நெட்டிசன்கள் சிலர் கொளுத்தி போட்டு வருகிறார்கள். எது எவ்வாறாயினும் தனுஷிற்குப் பின்னால் ஐஸ்வர்யா இருப்பது பலருக்கும் அதிர்ச்சியைக் கிளப்பி இருக்கின்றது.

Advertisement

Advertisement