• Jul 24 2025

முழுசாக சந்திரமுகியாக மாறிய பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்! - ட்ரெண்டிங் ஆகி வரும் வேற லெவெல் புகைப்படம்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

மோகன்லால், சுரேஷ் கோபி, ஷோபனா நடிப்பில், கடந்த 1993-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘Manichitrathazhu’. இந்த திரைப்படத்தை இயக்குநர் பி. வாசு, தமிழில் கடந்த 2005-ம் ஆண்டு ‘சந்திரமுகி’ என்றப் பெயரில் ரீமேக் செய்திருந்தார். இந்தப் படத்தில் மனநல மருத்துவராக ரஜினிகாந்தும், அவரது நண்பராக பிரபும் நடித்திருந்தனர். பிரபுவின் மனைவியாக ஜோதிகா நடித்திருந்தார்.

மேலும் நயன்தாரா, வடிவேலு, நாசர், வினீத், விஜயகுமார், மாளவிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் ‘பாபா’ தோல்விக்குப் பிறகு, ரஜினிகாந்துக்கு நல்ல கம்பேக் கொடுத்திருந்தது. 

வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றதையடுத்து, இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. பி.வாசு இயக்கிவரும் இதில் ராகவா லாரன்ஸ் வேட்டையன் கதாபாத்திரத்திலும், கங்கனா ரனாவத் சந்திரமுகி கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.

லஷ்மி மேனன், வடிவேலு, ராதிகா சரத்குமார், ரவி மரியா, மனோ பாலா உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ‘சந்திரமுகி 2’ படத்தில் தனது போர்ஷனை அண்மையில் தான் நடிகை கங்கனா ரனாவத் முடித்திருந்தார்.


 இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் மேக்கப்புடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement