• Jul 25 2025

''அந்த மாதிரி ‘டிரஸ்’ போட சொன்னாங்க''...மனம் திறந்த பிரபல நடிகை அனுபிரபாகர்.!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல நடிகை அனுபிரபாகர் தமிழில் மஜா, அற்புதம், அன்னை காளிகாம்பாள் ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர்.

இவர் கடந்த 2002ஆம் ஆண்டு கிருஷ்ணகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.  12 வருடங்கள் ஆக இருவரும் வாழ்ந்து வந்த நிலையில், பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த 2014-ஆம் ஆண்டு  விவாகரத்து பெற்றனர்.

இதனை தொடர்ந்து நடிகை அனுபிரபாகர் 2016 ஆம் ஆண்டு ரகு முகர்ஜியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் தற்போது மகன் ஒருவரும் இருக்கிறார். இதனையடுத்து, நடிகை அனுபிரபாகர்  சமீபத்திய பேட்டி ஒன்றில் ” முதல் திருமணம் விவாகரத்து எந்த காரணத்துக்காக நடந்தது என்பது குறித்து பேசியுள்ளார்.

இது குறித்து பேசிய நடிகை அனுபிரபாகர் ” நான் இதுவரை என்னுடைய விவாகரத்து குறித்து எந்த பேட்டியிலும் பேசியது இல்லை. இப்பொது சொல்கிறேன். எனக்கும் கிருஷ்ணகுமாருக்கும் திருமணம் முடிந்தபோது அவர் என்னை மிகவும் நன்றாக பார்த்துக்கொண்டார். அவருடைய அம்மா ஜெயந்தி (நடிகை ) திருமணம் ஆனா ஆரம்ப காலகட்டத்தில் ஒழுக்கமான உடைகள் அணிய சொன்னார்.

பிறகு அவர் என்னை மிகவும் மார்டனாக உடைகள் அணிய சொல்லி ரொம்பவே வற்புறுத்தினார். பொதுவாக ஒரு குடும்பத்திற்குள் கணவன், மனைவிக்குள் பல பிரச்சனைகள் இருக்கலாம் அதில் 3ஆம் நபர் வருவது எனக்கு சுத்தமாக பிடிக்காது. மனதில் வேதனையோடு வாழக்கூடாது. அதனால்தான் நான் எனது முதல் திருமண பந்தத்தை முறித்துக்கொண்டேன்” என கூறியுள்ளார்.


Advertisement

Advertisement