• Jul 24 2025

சீக்கிரமே அதிக வெடி வாங்குங்கள்... அந்தளவிற்கு துணிவு டிரைலர் இருக்கு.. முக்கிய பிரபலம் போட்ட திடீர்ப் பதிவு..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் நடிகர் அஜித் என்றாலே மாஸ் தான். இவரை எப்போதுமே ரசிகர்கள் 'தல' என்றுதான் செல்லமாக அழைப்பார்கள். இவர் சினிமாவை தாண்டி நிஜ வாழ்க்கையிலும் பல சூப்பரான முடிவுகள் எடுத்து அதன்மூலம் மக்களையும் வியக்க வைத்துள்ளார். 

இவரின் படங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ரசிகர்கள் கூட்டமோ ஏராளம். அந்தவகையில் தற்போது அவரது நடிப்பில் 'துணிவு' திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. அதுமட்டுமல்லாது தமிழகத்தில் அதிக திரையரங்குகளில் இப்படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.


துணிவு படத்திலிருந்து ஏற்கெனவே பல பாடல்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் செம வைரலானது. இந்நிலையில் தற்போது ரசிகர்கள் மத்தியில் டிரைலர் குறித்து நிறைய கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. அத்தோடு இப்படம் மொத்தமாக 2 மணிநேரம் 23 நிமிடம் எனவும், சென்சார் வேலைகள் முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.


இதனைத் தொடர்ந்து படத்தின் டிரைலர் குறித்து ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா டுவிட் ஒன்றினை இட்டுள்ளார். அதில் "இப்போது ஒன்றை பார்த்தேன், வெடிகளை அதிகம் வாங்கிக் கொள்ளுங்கள், நிறைய வாங்குங்கள்" எனக் கூறியுள்ளார். ஆனால் ஒரு சிலரோ இது உண்மையாகவே அவரது டுவிட்டர் பக்கமா என தெரியவில்லை எனக் கூறி வருகின்றனர். 

எது எவ்வாறாயினும் இப்பிடி ஒரு தகவல் வெளிவந்துள்ளமை அஜித் ரசிகர்கள் பலரதும் எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளன.


Advertisement

Advertisement