• Jul 25 2025

வாரிசு ப்ரோமோஷன்ஸ்..இப்படியா செய்வது..? கொந்தளித்த ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்துள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைங்கில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. ராஷ்மிகா நாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். எனினும் சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்களிடம் வேற லெவல் வரவேற்பை பெற்று வருகின்றது.

மேலும் இதன் காரணமாக படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. விரைவில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் இப்படத்துடன் அஜித்தின் துணிவு படமும் வெளியாகவுள்ளது. எட்டு ஆண்டுகள் கழித்து அஜித் மற்றும் விஜய்யின் படங்கள் மோதவுள்ளதால் ரசிகர்கள் ஆவலாக இந்த மோதலை எதிர்பார்த்து இருக்கின்றனர்.

எனவே இணையத்தில் அவ்வப்போது மோதிக்கொள்ளும் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் தற்போது தொடர் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.எனினும்  குறிப்பாக வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜ் விஜய் தான் நம்பர் ஒன் என சொன்னதும், விஜய் இசை வெளியீட்டு விழாவில் எனக்கு போட்டி நான் மட்டும் தான் என கூறியதும் அஜித் ரசிகர்களை சீண்டியுள்ளது.

இதன் காரணமாக இவ்விரு தரப்பினரிடையே உச்சகட்ட மோதல்கள் வெடித்துவருகின்றன. இந்நிலையில் தற்போது வாரிசு மற்றும் துணிவு படத்தின் ப்ரோமோஷன்கள் சூடுபிடிக்க துவங்கியுள்ளன. வாரிசு படத்திற்காக ஒரு ட்ரைன் முழுக்க வாரிசு படத்தின் போஸ்டர்களை ஒட்டி மிகப்பிரமாண்டமாக ப்ரோமோஷன் செய்து வருகின்றார் தில் ராஜு.

அதற்கு இணையாக ஆகாயத்தில் ஸ்கை டைவிங் மூலம் துணிவு படத்தின் ப்ரோமோஷனை செய்து வருகின்றார் போனி கபூர். இவ்வாறுஇருக்கையில்  ட்ரைனில் ஒட்டப்பட்டிருக்கும் வாரிசு படத்தின் போஸ்டர்களை கிழித்திருக்கும் புகைப்படங்கள் தான் தற்போது வைரலாகி வருகின்றது.

இதன் காரணமாக உச்சகட்ட கடுப்பில் விஜய் ரசிகர்கள் இருக்கின்றனர். அத்தோடு இதனை பார்த்த திரையரங்க உரிமையாளர்கள் படம் வெளியாகும் போது திரையரங்கத்திற்கு எந்த ஆபத்தும் வந்துவிட கூடாதென்ற கலக்கத்தில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement