• Jul 25 2025

வாங்க ரேங்கிங் டாஸ்க் விளையாடலாம்- தூங்கிக் கொண்டிருந்த விக்ரமனிடம் சேட்டை பண்ணிய ஷிவின்- கியூட்டான வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் வீட்டில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ப்ரீஸ் டாஸ்க் நடைபெற்றது. இந்த டாஸ்கின் போது ஹவுஸ்மேட்ஸின் உறவினர்கள் நண்பர்கள் எனப் பலரும் வருகை தந்து போட்டியாளர்களை குஷிப்படுத்தியிருந்தனர்.இது பார்வையாளர்களையும் நெகிழ்ச்சிப்படுத்தியது.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டுக்குள் அனைவரும் தூங்கிக்கொண்டிருக்க ஷிவின் எழுந்துவிடுகிறார். அமுதவாணன் மற்றும் ரச்சிதா ஆகியோரிடம் "வாங்க நம்ம ரேங்கிங் டாஸ்க் விளையாடலாம். எனக்கு போர் அடிக்குது" என்கிறார் ஷிவின். தொடர்ந்து "எழுப்பி விட்டிடுவோமா?" எனக் கேட்கும் ஷிவின் தலையணையை தூக்கி வீசுகிறார். அது, அமுதவாணனின் அருகில் படுத்திருந்த விக்ரமன் கட்டிலில் விழுகிறது.


அதனை எடுக்க அமுதவாணன் நைசாக செல்லும்போது, விக்ரமன் எழுந்துவிடுகிறார். அப்போது உடனடியாக அமுது மற்றும் ஷிவின் படுத்து தூங்குவது போல நடிக்கின்றனர். ஆனாலும், ஷிவினால் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. 

இதனையடுத்து, இருவரும் எழுந்து அமர்கின்றனர். பின்னர் அமுதவாணன் அங்கிருந்து நடந்து செல்கிறார். மீண்டும் படுத்துக்கொண்ட விக்ரமனிடம் "வாங்க டாஸ்க் விளையாடலாம்" என்கிறார் ஷிவின். இதனை கண்டு ரச்சிதா சிரித்துக்கொண்டிருக்கிறார்.



Advertisement

Advertisement