• Jul 24 2025

துணிவு படத்தின் ட்ரெய்லர் விஜய்யின் பீஸ்ட் படம் மாதிரியே இருக்கே- மோசமாக விமர்சித்து வரும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைபபடம் தான் துணிவு.இப்படத்தின் கதாநாயகியாக நடிகை மஞ்சு வாரியார் நடித்துள்ளார். இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகின்றது.


இப்படத்தில் வில்லத்தனத்தின் உச்சத்தில் அஜித் நடித்து இருக்கிறார். அஜித் தலைமையிலான கேங் ஒரு வங்கிக்குள் புகுந்து எல்லோரையும் பணய கைதிகளாக பிடித்து வைத்துக்கொள்கிறார்கள். 'மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கிறியே வெக்கமா இல்லையா' என பிரேம் கேட்க 'இல்லை' என அஜித் அவரது மாஸ்க்கை கழட்டிவிட்டு சொல்லும் காட்சி தான் ட்ரெய்லரிலேயே எல்லோரது கவனத்தையும் ஈர்க்கிறது.


மேலும் படம் முழுக்க ஆக்ஷன் காட்சிகள் தான் அதிகம் இருக்கும் என ட்ரெய்லரை பார்க்கும்போதே தெரிகிறது.துணிவு ட்ரைலருக்கு விமர்சனம் கலவையாக தான் வந்துகொண்டிருக்கிறது. மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித்தை முழு வில்லனாக பார்த்திருப்பதாக ரசிகர்கள் ஒருபக்கம் கூறி வருகிறார்கள்.

மறுபக்கம் நெட்டிசன்கள் 'இது பார்க்க பீஸ்ட் 2 போல இருக்கிறது, Money Heist வாடை அடிக்கிறது' என விமர்சித்து வருகிறார்கள். இதனால் அஜித் ரசிகர்கள் கடும் குழப்பத்தில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement