• Jul 25 2025

அப்பாவை இழந்து தவிக்கும் அஜித்திற்கு லைகா இப்படி பண்ணலாமா? கொந்தளித்த ரசிகர்கள்!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

 லைகா நிறுவனம் இன்று திடீரென செய்த அந்த செயல் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் அஜித் போனி கபூர் தயாரிப்பில் தொடர்ந்து 3 படங்களில் நடித்து வந்தார். இவ்வாறுஇருக்கையில், அடுத்ததாக லைகா நிறுவனம் தயாரிப்பில் ஏகே 62 படத்தில் நடிக்க உள்ளார்.

அதற்காக சென்னை திரும்பி இருந்த நடிகர் அஜித்துக்கு நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒரு பேரிழப்பாக அவரது தந்தை சுப்பிரமணியத்தின் மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

அஜித்தின் ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்ட நிலையில், அடுத்ததாக அந்த படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி தான் இயக்கப் போகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அதனை உறுதிப்படுத்தும் வகையில், இன்று அஜித் தந்தை மறைவு செய்தியை அறிந்ததுமே இயக்குநர் மகிழ் திருமேனி அஜித் வீட்டுக்கு சென்று அவருக்கு ஆறுதல் கூறிய வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.


நடிகர் அஜித்தின் மறைவு செய்தியால் ஒட்டுமொத்த ரசிகர்களும் திரையுலகமும் சோகத்தில் மூழ்கி உள்ளது. அத்தோடு விஜய், விக்ரம், கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், திடீரென லைகா நிறுவனம் எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி திடீரென பொன்னியின் செல்வன் 2 அறிவிப்பை வெளியிடாமல் தவிர்த்து இருக்கலாமென சினிமா பிரபலங்களே பலர் கருத்து கூறி வருகின்றனர்.


அத்தோடு பொன்னியின் செல்வன் 2 படத்தின் ட்ரெய்லர் வரும் மார்ச் 29ம் தேதி வெளியாகும் என்கிற அறிவிப்பை லைகா நிறுவனம் தற்போது திடீரென வெளியிட்ட நிலையில், தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் அதன் மீது எந்தவொரு ஆர்வத்தையும் காட்டாமல் அப்படியே விட்டு விட்டதே லைகா நிறுவனத்துக்கு பெரும் அடியாக இருக்கும் என அஜித் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

நடிகர் அஜித்தை வைத்து அடுத்ததாக லைகா படம் பண்ண உள்ள நிலையில், அப்பாவை இழந்து தவிக்கும் அஜித்துக்கு ஆதரவாக இரங்கல் குறிப்பு தெரிவிக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை இன்றைக்காவது பொன்னியின் செல்வன் அப்டேட்டை வெளியிடாமல் இருந்திருக்கலாமெ ன அஜித் ரசிகர்கள் லைகாவுக்கு எதிரான தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement