• Jul 25 2025

நான் டிப்ஸ் கொடுத்தால் மகள் ஜெயிக்க முடியுமா?- ஜோவிதாவுக்கு வனிதா கொடுத்த அட்வைஸ்ட்- ஆச்சரியத்தில் கமல்ஹாசன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 6 ஜனவரி மாதம் நிறைவடைந்த நிலையில், பத்து மாதம் கழித்து தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இன்று கோலாகலமாக தொடங்கி உள்ளது. இதில், நிகழ்ச்சி தொடங்கிய போது, நெஞ்சம் உண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என எம்ஜிஆர் பாடலுடன் கமல்ஹாசன் படுக்கையில் இருந்து எழுந்து ரெடியாகி நிகழ்ச்சியை தொடங்கினார்.

வழக்கமாக ஒரே வீட்டில் 18 போட்டியாளர்கள் இருப்பார்கள். ஆனால்,இந்த முறை இரண்டு வீடு என்று கூறப்பட்ட நிலையில், அதை விரிவாக விளக்குவதற்காக கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் வந்து மெட்ராஸ் பாசை பேசி அசத்தினார். 


பின் வீட்டை சுற்றிப்பார்த்துவிட்டு விளக்கமும் கொடுத்தார். அதில் இரண்டு வீடு இருந்தாலும், ஒரே ஒரு வாசல், ஒரே ஒரு கிச்சன் தான். சமையல் அறை ஒன்றாக இருந்தால் தானே முட்டி மோதிக்கொள்வார்கள் என்பதை நன்றாக தெரிந்து கொண்ட பிக் பாஸ் டீம் அதை மாற்றவே இல்லை.

தொடர்ந்து ஒவ்வொரு போட்டியாளர்களாக உள்ளே என்ட்ரி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் நடிகை வனிதாவின் மகள் ஜோவிதாவின் மகளும் என்ட்ரி கொடுத்துள்ளார். அப்போது பேசிய ஜோவிதா எனக்கு படிப்பு வரவில்லை, அதனை என் அம்மாவும் புரிந்துகொண்டார். படிப்பு வரவில்லை என்றால் என்ன, வேறு என்ன செய்ய விருப்பம் என கேட்டார், நான் நடிகை ஆக வேண்டும் என கூறினேன் என்று கூறினேன்.அதுக்து ஓகே சொல்லிட்டாங்க என்று சொல்கின்றார்.


தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் விளையாட அம்மா என்ன டிப்ஸ் கொடுத்தாங்க என்று கமல்ஹாசன் கேட்க, அவங்க எதுவும் தரல என்று சொல்கின்றார்.ஷோவுக்கு வந்திருந்த வனிதாவிடமே கமல் அந்த கேள்வியை  கேட்க, "நான் எத்தனை முறை பிக் பாஸ் வந்திருக்கிறேன். அத்தனை முறையும் என்னை வெளியில் அனுப்பிட்டீங்க. நான் டிப்ஸ் சொல்லி அனுப்பினா என மகள் ஜெயிக்க முடியுமா" என வனிதா கமலிடம் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement