• Jul 25 2025

உங்க வயசுக்கு இப்படி ஒரு போட்டோ ஷேர் பண்ணலாமா நீங்க- ப்ளூ சட்டை மாறனுக்கு பதிலடி கொடுத்த மாவீரன் பட பிரபலம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

ஆர்ஜே பாலாஜி, பார்த்திபன், விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களை வம்புக்கு இழுத்து ட்வீட் போட்டும் அவர்கள் நடித்த படங்களை கடுமையாக விமர்சித்தும் சர்ச்சை விமர்சகராக வலம் வருகிறார் ப்ளூ சட்டை மாறன்.

சில நல்ல படங்களை ப்ளூ சட்டை மாறன் பாராட்டி விட்டால், அந்த படத்தின் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் நன்றி தெரிவித்தும் வருகின்றனர். சமீபத்தில் அசோக் செல்வனின் போர் தொழில் படத்தை பாராட்டி இருந்தார் . மேலும், மாமன்னன் படத்தின் ஃபர்ஸ்ட் ஹாஃபை வெகுவாக பாராட்டி விட்டு இரண்டாம் பாதியில் இருந்த குறைகளையும் சுட்டிக் காட்டி இருந்தார்.


 ஏகப்பட்ட சண்டை போட்டாலும் இந்த ப்ளூ சட்டை கிழியாமல் தப்பித்து வருகிறது என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.இதனை அடுத்து ரசிகர்கள் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் ரிலீஸிற்காக காத்திருக்கின்றனர். சமீபத்தில் நடந்த ப்ரீ ரிலீஸ் விழாவில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் ட்ரெய்லருக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து இருக்கிறது. 2 நாட்களில் 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் அதற்கு கிடைத்து இருக்கிறது.


மாவீரன் படம் ஜூலை 14ம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில், 12ம் தேதி டாம் க்ரூஸ் நடித்த Mission Impossible 7 படத்திற்கு தான் அதிகம் ரிசர்வேஷன் நடக்கிறது என ப்ளூ சட்டை மாறன் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.அதற்கு பதிலடி கொடுத்திருக்கும் மாவீரன் பட தயாரிப்பாளர் அருண் விஷ்வா, "உங்க வயசுக்கு இப்படி ஒரு போட்டோ ஷேர் பண்ணி, நீங்க இதை பண்ணிருக்க வேணாம் சார்" என பதிலடி கொடுத்து இருக்கிறார். 

Advertisement

Advertisement