• Jul 24 2025

டான்ஸ் மாஸ்டர்.. சாண்டியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? ஷாக்கான ரசிகர்கள்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

சாண்டி மாஸ்டர்: சின்னத்திரையில் நடன இயக்குநராக வலம் வந்து கொண்டிருந்த சாண்டி, தண்ணில கண்டம், கெத்து போன்ற படங்களுக்கு நடனம் அமைத்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா படத்தில் நடன இயக்குனராக பணியாற்றினார். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாம், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

இதன்பின், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற சாண்டி மாஸ்டர் நல்ல எண்டர்டெய்னராக இருந்தார். அந்த நிகழ்சியின் முடிவில் முகேன் ராவ் பிக் பாஸ் சீசன் 3 டைட்டிலை வென்றார். சாண்டி மாஸ்டர் ரன்னர் அப்பாக இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

தற்போது சாண்டி நேரம், பிரேம்,கோல்ட் போன்ற மாஸ் ஹிட் படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்ரன் படத்தில் நடன இயக்குநர் சாண்டி ஹீரோவாக நடித்து வருகிறார்.என்பது குறிப்பிடத்தக்கது.

சாண்டி மாஸ்டர் ஒரு எபிசோடுக்கு ரூ. 50 ஆயிரம் ரூபாயை சம்பளமாக பெருவதாக கூறப்படுகிறது. தற்போது சாண்டி ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களும் நடனம் அமைத்து வருவதால் அவரின் சம்பளம் கணிசமாக உயர்ந்துள்ளது. நடனம், நடிப்பு மற்றும் மாடலிங்கை பிரதான தொழிலாக வைத்திருக்கும் சாண்டி மாஸ்டர் பெரிதாக விலை உயர்ந்த காரோ,பைக்கோ வைத்திருக்கவில்லை என்றாலும், அவருக்கு ரூ. 7 கோடி ரூபாய் சொத்து வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Advertisement

Advertisement