• Jul 26 2025

"என் பொண்டாட்டியை வச்சு வாழ முடியாதா..." சபதம் போட்ட தமிழ்..பரபரப்புடன் வெளியான ப்ரமோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் பல சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் பகல் நேரத்தில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும்.

இந்த சீரியலில் தமிழ் ராகினியின் கணவரை தமிழ்  கொலை செய்ய  திட்டமிட்டதாகவும் தமிழ் கம்பனியின் முதலாளியாக ஆக திட்டமிட்டு பழி வாங்குவதாகவும் வீட்டில் இருப்பவர்கள் நினைத்து  நிலையில் தமிழ் திடீரென வீட்டை விட்டு வெளியேறுகின்றார்.

இவ்வாறுஇருக்கையில் சரஸ்வதியின் தாயார் மற்றும் தந்தை  சரஸ்வதியை சந்திக்க வீட்டிற்கு வர சரஸ்வதி ஓடிப்போய் கட்டியணைத்து அழுகின்றார்.வீட்டிற்கு வாங்க மாப்பிள்ளை என்று கூறியதும் கோவப்படுகின்றார் தமிழ்.

பெற்றோருடைய சொத்து இல்லை என்றால் என்னால என் பொண்டாட்டயை வச்சு வாழ முடியாதா..என்னை நம்பி வந்த என் சரஸ்வதியை நான் வச்சு வாழுவேன்..என் உழைப்பு மேல எனக்கு நம்பிக்கை இருக்கு..என் பொண்டாட்டியை ராணி மாதிரி வச்சு காப்பாத்துவேன்..என சபதம் போட நரஸ்வதியின் பெற்றோர் சென்று விடுகின்றனர்.இத்துடன் இன்றைய ப்ரமோ நிறைவடைகின்றது.

Advertisement

Advertisement