• Jul 26 2025

'விஜய் பற்றி அவரிடமே போய்க் கேளுங்க'.. எஸ்.ஏ. சந்திரசேகரின் பதிலால் தளபதி ரசிகர்கள் அதிர்ச்சி..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் இடையே கடந்த வருடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அரசியல் காரணமாக ஏற்பட்ட இந்த கருத்து வேறுபாடு ஆனது சமூக வலைத்தளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


இதனைத் தொடர்ந்து இன்றுவரை இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பேசாமலே இருந்து வருகின்றார்கள். மேலும் விஜய் தற்போது 'லியோ' படப்பிடிப்பிற்காக காஷ்மீர் சென்றிருக்கின்றார். இந்நிலையில் விஜய் குறித்த கேள்விகளை அவரிடமே கேளுங்கள் என இயக்குநரும், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ள விடயமானது தற்போது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறி இருக்கின்றது.


அதாவது சமீபத்தில் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ள புத்திர காமேட்டீஸ்வரர் ஆலயத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் சாமி தரிசனம் மேற்கொண்டார். அதன் பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், "விஜய் அரசியலுக்கு வருவாரா' என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு "விஜய் குறித்த கேள்வியை அவரிடமே கேளுங்கள்" என எஸ்.ஏ.சந்திரசேகர் பதிலளித்தார். அவரது இந்தப் பதில் ஆனது விஜய் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement