• Jul 25 2025

தி.நகருக்கு கொண்டுவரப்பட்டுள்ள சரத்பாபுவின் உடல்... அஞ்சலி செலுத்தக் குவியும் பிரபலங்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சினிமாவின் பழம்பெரும் நடிகர் சரத்குமார் உடல்நலக்குறைவு காரணமாக நேற்றைய தினம் உயிரிழந்தார். அவரின் மறைவு திரைத்துறையினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.. 


சினிமாவைத் தொடர்ந்து தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த சரத்பாபு, வயது மூப்பு காரணமாக சினிமாவை விட்டு விலகி ஹைதராபாத்தில் வசித்து வந்த நிலையில், திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென ஹைதராபாத் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இதனால் ஹைதராபாத் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று 1.30மணி அளவில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இதனையடுத்து தற்போது இவரின் உடல் ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.


அங்கு தி.நகரில் உள்ள அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திரைப்பிரபலங்கள் நேரில் சென்று அவருக்கு தங்களது அஞ்சலியைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement