• Jul 25 2025

'ஆர் ஆர் ஆர்' திரைப்பட நடிகர் திடீர் மரணம்... வெளிவராத காரணம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநரான எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வசூல் சாதனை படைத்த திரைப்படம் 'ஆர் ஆர் ஆர்'. இப்படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அஜய்தேவ்கன், ஆலியாபட், ஸ்ரேயா சமுத்திரக்கனி எனப் பலரும் நடித்திருந்தனர். 


அந்தவகையில் ஆர்ஆர்ஆர் படத்தில் வில்லனாக கவர்னர் ஸ்காட் பக்ஸனாக கதாபாத்திரத்தில் ரே ஸ்டீவன்சன் என்ற அயர்லாந்து நடிகர் நடித்திருந்தார். இவர் படங்களில் மட்டுமின்றி டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். 


இந்நிலையில் 58 வயதாகும் இவர் இத்தாலியில் உள்ள தனது வீட்டில் திடீரென உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இவரின் இறப்புக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாக வில்லை. 


ஆஸ்கர் விருதை பெற்ற மகிழ்ச்சியில் இருக்கும் போது ஸ்டீவன்சன் இறந்துள்ளது படக்குழுவினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இவரின் மறைவிற்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement